இந்த puzzle படத்தில் ஒரு தவறு இருக்கு! 99.99% பேர் தோல்விதான்! நீங்களாவது கண்டுபிடியுங்கள்!
சென்னை: இந்த படத்தில் ஒரு தவறு இருக்கிறது, அதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி? குழப்பம் ஏற்படுமோ அப்படித்தான் இவைகளும்.

கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.
நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன் , பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. தற்போது மூளைக்கு வேலை கொடுக்கும் பசில்களை பார்க்கலாம். ஒரு விடுகதையில் 1, 2, 3, 4, 5, 6, 7 ,8, 9 ஆகிய எண்கள் உள்ளன.
இங்குள்ள தவறை கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்கள். அந்த 1 முதல் 9 வரை உள்ள எண்களை எத்தனை தடவை படித்தாலும் சரியாக இருப்பது போன்றே வருகிறது. இந்த படத்தை இதுவரை லட்சக்கணக்கான நபர்கள் பார்த்துவிட்டனர். ஆனாலும் அவர்கள் விடையை கண்டுபிடிக்கவில்லை.
ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு நிறம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் என்ன தவறு என தெரியாமல் பலர் விழிக்கிறார்கள். என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? தவறே இல்லாத ஒரு விஷயத்திற்கு இத்தனை நேரம் செலவழிக்க வைக்கிறீர்களா என்றெல்லாம் பலர் கோபப்பட்டுள்ளார்கள்.
சரி சரி நீங்களும் கோபப்படுவது எனக்கு தெரிகிறது. நாங்களே விடையை சொல்கிறோம். அதாவது தவறு எண்களில் இல்லை. கேட்ட கேள்வியில்தான் இருக்கிறது. Can you Find the the mistake? என உள்ளது. இதில் the என்பது 2 முறை வருகிறதாம். அதுதான் தவறு! பலர் இந்த விடையை நீண்ட நேரம் கழித்துதான் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஒரு சிலர் 9 வினாடிகளிலேயே கண்டுபிடித்துள்ளார்கள். இன்னும் சிலர் கண்டே பிடிக்கவில்லை. பார்ப்பதற்கு சிம்பிளாக இருக்கிறது. ஆனாலும் எப்படி குழப்புகிறது பாருங்கள்! இப்படி ஆப்டிக்கல் இல்யூஷன் இருக்கும். மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தால் நல்லதுதானே!













Click it and Unblock the Notifications