நடிகர் விஜய்யை வாவ் சொல்ல வைத்த வெற்றிலை பாயாசம்! சமையல் கலைஞரே சொன்ன ரெசிபி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பரிமாறப்பட்ட வெற்றிலை பாயாசம்தான் ஊரெங்கும் பேச்சாக இருக்கிறது. மருத்துவ குணங்களை கொண்ட வெற்றிலையில் பாயாசம் எப்படி செய்வது என்பதைதான் பலர் தேடி வருகிறார்கள்.

10, 12 ஆம் வகுப்புகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் இரண்டாவது ஆண்டாக பரிசு வழங்கினார். அதில் அவர் மாணவர்களுக்கும் அவருடன் வரும் பெற்றோருக்கும் மதிய உணவை வழங்கினார். அதில் எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒன்று வெற்றிலை பாயாசம்தான்

vijay food

விஜய் விருது வழங்கும் விழாவில் சமையல் செய்த கலைஞர் ரவி 1000 பேருக்கான ரெசிபியை ஒரு சேனலுக்கு அவர் கூறியிருந்தார். அதை வைத்து ஒருவருக்கு வெற்றிலை பாயாசம் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பாதாம் பிசின்- 1 கிராம்

ஊற வைத்த பாதாம், முந்திரி, பிஸ்தா- தேவையான அளவு

பால்-100 மில்லி

வெற்றிலை- 1

ஏலக்காய் பொடி, குங்குமப்பூ- சிறிதளவு

சர்க்கரை அல்லது வெல்லம் - சிறிதளவு

செய்முறை

பாதாம் பிசினை ஊற வைத்துக் கொள்ளவும், பிறகு பாதாம், முந்திரி, பிஸ்தாவை அரைத்துக் கொள்ள வேண்டும். பாலை சுண்ட காய்ச்சிக் கொள்ள வேண்டும். அப்போது மலாய் போல் வரும், பிறகு அந்த பாலில் பிசின், பாதாம் விழுது, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து நன்கு கிண்டி விடவும். வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து அதில் ஊற்றவும்.

பாதாம் பிசினிலேயே இயற்கையான சர்க்கரை உள்ளது. எனவே தேவைக்கேற்ப சேர்த்தால் போதுமானது. வாசனைக்கு ஏலக்காய் பொடி, குங்குமம்பூ தூவிவிட வேண்டும். மேலும் சுவைக்கு பாதாம், முந்திரி, பிஸ்தாவை சிறு துண்டுகளாகவோ சீவலாகவோ சேர்த்து ஐஸ் போட்டு கொடுத்தால் வெற்றிலை பாயாசம் ரெடி!

நேற்று இரண்டாம் கட்டமாக நடந்து முடிந்த விருது வழங்கும் விழாவில் மலாய் சாண்ட் விச், ஆக்ரா பான் ஸ்வீட், அவியல், வெங்காய மணிலா பக்கோடா, வெற்றிலை பாயாசம், இஞ்சி துவையல் உள்ளிட்டவை சமைத்திருந்தனர். ரவி சமைத்ததைத்தான் நடிகர் விஜய்யும் சுவைத்தாராம். சமையல் கலைஞர்களை அவர் பாராட்டவும் செய்திருக்கிறார். நேற்றைய தினம் 800 பேருக்கு இந்த விருந்து வழங்கப்பட்டது. காலையில் பொங்கல், வடை வழங்கப்பட்டது.

வெற்றிலையானது கபம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடியது. வெற்றிலைச் சாறுடன் தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அனைத்து வயதினரும் வெற்றிலையை சாப்பிடலாம். தொண்டைப்புண், இதய நோய் இருப்பவர்கள் வெற்றிலையை சாப்பிட வேண்டாம்.

ஹெவியாக சாப்பிட்டவுடன் அது செரிக்க வெற்றிலை, கிராம்பு, பட்டை, ஓமம், சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். இதன் மூலம் வயிற்றில் உள்ள வாயு பிரச்சினைகள் சீராகும். வெற்றிலை மூலம் மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகளும் நீங்கும். மார்பில் உள்ள சளியை நீக்கும் சக்தி வெற்றிலைக்கு உண்டு. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். தொற்று நோய்களும் குறையும். வெற்றிலையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஏற்படும். ஒரு வேளை வெற்றிலையால் புண்கள் ஏற்பட்டால் நல்லெண்ணெய்யால் வாய் கொப்பளிக்கலாம். மழைக்காலங்களில் வெற்றிலை நிச்சயமாகவே வரப்பிரசாதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+