இனி டோல் கேட்களில் வாழ்நாள் பாஸ் எடுக்கலாம்.. பயணம் செய்வது ரொம்ப ஈஸி.. மத்திய அரசு பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடிக்கடி நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ளும் மக்கள் இனி புதிய வருடாந்திர மற்றும் வாழ்நாள் பாஸ்கள் பெற முடியும். இதன் மூலம் வருடாந்திர அளவில் குறைந்த அளவு டோல் கட்டணங்களை செலுத்த முடியும்.

FASTagsல் இனி ₹3,000 ரூபாய்க்கு வருடாந்திர பாஸ் அல்லது 15 ஆண்டுகளுக்கு வாழ்நாள் பாஸ் ₹30,000க்கு பெற முடியும். இதற்கான திட்டங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போதைய மாதாந்திர பாஸ்களின் விலை ஆண்டுக்கு ₹4,080 ஆகும். இந்த கட்டணத்தை குறைக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இந்த திட்டத்தை மதிப்பாய்வு செய்து வருகிறது.

automobile fastag

மக்களின் பயணச் செலவைக் குறைக்கும் வகையில் அமைச்சர் நிதின் கட்கரி இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், இது நெடுஞ்சாலைப் பயணத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தலாம்.

டோல் பிளாசா மாற்றம்:

அதோடு தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. GIS அடிப்படையிலான மென்பொருளுடன் கூடிய புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. சுமார் 100 சுங்கச்சாவடிகளைக் கண்காணிக்க இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை கழகம் முடிவு செய்துள்ளது.

டோல் பிளாசாவில் வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால்.. அதாவது வரிசையில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக வாகனங்கள் இருக்கும் போது அதை புதிய சென்சார் உதவியுடன் கண்காணிப்பார்கள். ​​நேரலை கண்காணிப்பு அமைப்பு மூலம் நெரிசல் கண்காணிக்கப்பட்டு அதற்கான எச்சரிக்கைகள் விடுக்கப்படும்.

டோல் பிளாசாக்களில் தடையற்ற இயக்கத்தை மேம்படுத்த, இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவன லிமிடெட் (IHMCL)டோல் பிளாசாக்களில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை 'நிகழ்நேர கண்காணிப்பு' மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இணையம் வழியாக சுமார் 100 சுங்கச்சாவடிகளை NHAI ஆய்வு செய்து வருகிறது.

1033 தேசிய நெடுஞ்சாலை ஹெல்ப்லைன் மூலம் பெறப்பட்ட நெரிசல் கருத்து கணிப்பின் அடிப்படையில் முதல் கட்டமாக 100 சுங்கச்சாவடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் 100 சுங்கச்சாவடிகளுக்கு இந்த முறை கொண்டு வரப்பட்டாலும்.. இந்த கண்காணிப்பு சேவை படிப்படியாக மேலும் விரிவுபடுத்தப்படும்.

டோல் பிளாசாவின் பெயர் மற்றும் இருப்பிடத்தை ஆய்வு செய்வது மட்டுமின்றி.. டோல் பிளாசாவில் வரிசை நீளம், மொத்த காத்திருப்பு நேரம் மற்றும் வாகனத்தின் வேகம் ஆகியவற்றையும் கணக்கிட்டு இதற்கான சாப்ட்வேர் எச்சரிக்கை தகவல்களை குறிப்பிட்ட டோல்கேட் உடன் பகிர்ந்து கொள்ளும். டோல் பிளாசாவில் வாகனங்களின் வரிசை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்தால்.. உடனே எச்சரிக்கை அனுப்பப்பட்டு.. ரூட் மாற்றப்படும். இதன் மூலம் வரும் நாட்களில் டோல் கேட்களில் டிராபிக் குறையும் என்று கூறப்படுகிறது.

மாற்றம்:

நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அமைச்சர் நிதின் கட்கரி இந்த புதிய முறையை உறுதி செய்துள்ளார். இது எப்படி செயல்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.

ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை இயக்க, அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) இருப்பது அவசியம். அரசாங்கம் திட்டமிட்டுள்ளபடி, இது மூன்றாம் தலைமுறை (3ஜி) மற்றும் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய மைக்ரோ-கண்ட்ரோலரின் உபகரணங்களின் மூலமாக இயங்கும்.

ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் வாகனங்களின் ஜி.பி.எஸ் ரெக்கார்டுகளை அரசு பெற்று அவற்றை தொடர்ந்து கண்காணிக்க முடியும். எனவே, அவர்கள் பயணிக்கும் வாகனங்களின் வழித்தடத்தையும், அவர்கள் எடுக்கும் சுங்கச்சாவடிகள் ரூட் என்ன என்பதையும் அரசு தெரிந்து கொள்ளும். அவர்கள் எத்தனை டோல் கேட்களைக் கடந்து செல்கிறார்கள் என்பதைச் சரிபார்த்து மொத்த டோல் வரியைக் கணக்கிடலாம் என்ற திட்டத்தில் மத்திய அரசு உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+