Free Cycles: பிளஸ் 1 மாணவர்களுக்கான நவீன விலையில்லா சைக்கிள்! விலையை குறைத்தது ஹீரோ நிறுவனம்!
சென்னை: தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டத்தில் சைக்கிளின் விலையை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது. 9 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு விலையை குறைக்க முன்வந்துள்ளது.
தவெக அரசின் பட்ஜெட்டில் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் அரசு, அரசு உதவி பெறும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்திற்காக டெண்டர் கோரப்பட்டது.
தற்போது 2,37,133 மாணவர்களுக்கும் , 2,95,255 மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்த புள்ளியை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
அதன்படி மாணவர்களின் சைக்கிள் ஒன்று ரூ 7,235-க்கும் , மாணவிகளுக்கான சைக்கிள் ரூ 7476-க்கும் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் கோரியிருந்தது. இதையடுத்து விலையை குறைக்க ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன்படி தற்போது சைக்கிளுக்கான விலையை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது. மாணவர்களுக்கு ரூ 5260-க்கும் மாணவிகளுக்கு ரூ 5130-க்கும் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ரூ 1975 ரூபாயையும் மாணவிகளுக்கும் ரூ 2346-ஐயும் குறைத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்க ரூ 276.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications
