ரகசிய மீட்டிங்.. 17 வருடங்களுக்கு முன் சீனாவில் சோனியா நடத்திய சீக்ரெட் கூட்டம்.. நடந்தது என்ன?
சென்னை: 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் நடந்த சமயத்தில் சீனா உலகிற்கே தன்னை யார் என்று அறிமுகம் செய்தது. விளையாட்டு, கலை, ராஜதந்திரம் சர்வதேச போட்டிகள் மற்றும் முன்னேற்றம் என்று பல விஷயங்களை உலகிற்கு பிரம்மாண்டமாக காட்டியது. உலக நாடுகளே அப்போது சீனாவைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தன. ஆனால் மக்கள் பார்த்த அந்த வெளிச்சத்திற்கு அப்பால், தெற்காசியாவின் இரண்டு முக்கிய அரசியல் குடும்பங்களுக்கு இடையே அமைதியான, சத்தமே இல்லாத ரகசியம் வாய்ந்த சந்திப்பு ஒன்று நடந்தது.
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது, இந்திய தேசிய காங்கிரஸின் அப்போதைய தலைவரான சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோருடன் பெய்ஜிங்கில் இருந்தார். அதே சமயத்தில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, அவரது சகோதரிகள் பக்தவார், ஆசிஃபா, ஜஹாங்கிர் பதர் மற்றும் ரெஹ்மான் மாலிக் உள்ளிட்ட மூத்த பிபிபி தலைவர்களும் சீனாவில் தங்கி இருந்தனர்.

ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) அழைப்பின் பேரில் இரு நாட்டு பிரதிநிதிகளும் பெய்ஜிங்கில் இருந்தனர். வரலாற்று ரீதியாக இரண்டு நாடுகளிலும் செல்வாக்கு மிக்க அந்த இரு குடும்பங்களும் சுமார் 30 நிமிடங்கள் சந்திப்பை நடத்தினர். அந்த ஆண்டின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் படுகொலை குறித்து சோனியா காந்தி பூட்டோவின் குடும்பத்தினரிடம் பேசி, அவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் வெளியான அதிகாரபூர்வ அறிக்கைகளில், ரெஹ்மான் மாலிக் இந்த சந்திப்பை அன்பானதாகவும், நெகிழ்ச்சி மிக்கதாகவும் இருந்ததாக விவரித்தார். எந்த அரசியல் விவாதங்களும் நடத்தப்படவில்லை என்றும் கூறினார். துக்கம், குடும்ப நினைவுகள் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் செய்த ஒப்பந்தம்
அதே நேரத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டதாக செய்திகள் வந்தன. இந்தியாவின் அரசியல் மற்றும் சர்வதேச விஷயங்களில் சீனாவுடன் ஆலோசனைகளை நடத்த அனுமதிக்கும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதாவது இந்தியாவின் சர்வதேச விவகாரங்களில் சீனாவுடன் ஆலோசனை செய்யலாம் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் ஒருபோதும் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும் அந்த ஒப்பந்தம் பல சந்தேகங்களை எழுப்பியது.
பாகிஸ்தான் மக்கள் கட்சி அந்த ஆண்டின் பிற்பகுதியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் முழுமையான விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
வெளியான புகைப்படம்
தற்போது, 18 ஆண்டுகளுக்கும் பிரபு, அந்த சந்திப்பின் புகைப்படம் சமூக ஊடகங்களில் மீண்டும் வெளியாகி, கவனத்தையும் விவாதத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த வாரத்தில் தீவிரமாக பரப்பப்பட்ட இந்தப் படம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அந்த கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? குடும்ப விவகாரங்கள் தாண்டி அரசியல் ரீதியாக பேசியது என்ன? சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்ன? அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தச் சந்திப்பு அதிகாரப்பூர்வ ராஜதந்திர சந்திப்பாக இல்லாவிட்டாலும், அது சீன மண்ணில், CPCயின் அழைப்பின் பேரில் நடந்தது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. சீன மண்ணில் இந்தியாவின் முக்கிய அரசியல் குடும்பம் பாகிஸ்தான் தலைவர்களை சந்திப்பது சாதாரண விஷயம் இல்லை. இதுதான் தற்போது அந்த விவகாரம் விவாதத்திற்கு உள்ளாக முக்கிய காரணம்.
சில விமர்சகர்களும் நெட்டிசன்களும் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த சந்திப்பின் நோக்கம் மற்றும் உண்மையான சூழலை தெளிவுபடுத்துமாறு கேட்டுள்ளனர், குறிப்பாக சர்வதேச சூழலில் இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு இடையே நடந்த அந்த சந்திப்பில் உண்மையில் பேசப்பட்டது என்ன என்று கேட்டுள்ளனர். ஆனால் அந்த படம் குறித்து காங்கிரஸிடமிருந்து இன்னும் முறையான பதில் இல்லை.
Sonia, Rahul, Priyanka had meeting with Bhuttos at Beijing in 2008.
— Ankur Singh (@iAnkurSingh) May 21, 2025
Neither of them were Prime Minister or any Minister in Govt.
Why did they meet?
So much love and bonding? pic.twitter.com/OGl4nRMgTo
இந்தப் பதிவு தொடர்ந்து பிரபலமடைந்து வருவதால், ஒரு காலத்தில் வெறும் இரங்கல் கூட்டம் என்று கருதப்பட்ட நிகழ்வு இப்போது பொதுமக்களின் மக்களின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. அப்போது உண்மையில் அவர்கள் பேசியது என்ன? எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? அந்த சந்திப்பிற்கு பின் என்னவெல்லாம் நடந்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications