மின் வாரியத்துக்கும் SC, ST ஆணையத்துக்கும் என்ன சம்பந்தம்? வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
சென்னை: மின் இணைப்பு வழங்காததற்கும், தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? அவர்கள் எப்படி தலையிட முடியும்? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, வழக்கில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டார்.
கோவை சுண்டாக்காமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பு பகுதிக்கு மின் இணைப்பு கேட்டு புருஷோத்தமன் என்பவர் விண்ணப்பித்திருந்தார். கட்டடம் முழுமையாக கட்டி முடித்ததற்கு தடையில்லா சான்றிதழ் இல்லாததால் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

புருஷோத்தமன் பட்டியலினத்தவர் என்பதால், மின் இணைப்பு வழங்கப்படாத விவகாரத்தை எஸ்சி/ எஸ்டி ஆணையத்துக்கு கொண்டு சென்றார். கோவை மாநகர மின் பகிர்மான வட்டத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரியும் சங்கீதாவுக்கு எதிராக அவர் எஸ்.சி/ எஸ்.டி ஆணையத்தில் புகார் அளித்தார்.
இவ்வாறு எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கு புகார் சென்றதை அறிந்த மின் பகிர்மானக் கழகம், உதவி செயற்பொறியாளர் சங்கீதாவை துடியலூருக்கு பணியிடமாற்றம் செய்தது. இதனை எதிர்த்து சங்கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், "சட்டப்படி செயல்பட்ட என்னை பணியிட மாற்றம் செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், கட்டட பணி முடிப்பு சான்று இல்லாமல், குறிப்பிட்ட அந்த குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்கும்படி மின் பகிர்மான கழக இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரினார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சங்கீதாவின் பணியிட மாற்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், எந்த அடிப்படையில் கட்டட பணி முடிப்பு சான்று இல்லாமல், மின் இணைப்பு வழங்க பரிந்துரை கடிதம் அளிக்கப்பட்டது என நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மின்வாரியம் தரப்பில் இயக்குநர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதி, பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் இயக்குநர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் மின் இணைப்பு வழங்காததற்கும், தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? அவர்கள் எப்படி இதில் தலையிட முடியும்? என்று கேள்வி எழுப்பிய ஔகோர்ட் நீதிபதி, வழக்கில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தை எதிர் மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரரை பழைய இடத்தில் பணியில் சேர அனுமதிக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை பிப்ரவரி வருகிற 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications