Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘ஜனநாயகன்’ படத்தில் மத மோதலை தூண்டும் வகையில் வசனங்கள்.. ஐகோர்ட் சொன்ன மேட்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மத மோதலை தூண்டுவதாக 'ஜனநாயகன்' (Jana Nayagan)படத்தில் சில வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு இன்று தெரிவித்துள்ளது. மேலும், ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்கவும், சென்சார் போர்டுக்கு பதில் மனு தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவுட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்ட 'ஜன நாயகன்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9 ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது.

High Court Chief Justice Flags Jana Nayagan Dialogues Orders Rehearing by Single Judge

இந்த வழக்கின் விசாரணை கடந்த 7ஆம் தேதி நீதிபதி ஆஷா முன்பு வந்த போது, படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்ததாலும், பாதுகாப்பு படைகளின் சின்னம் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆஷா, வழக்கின் தீர்ப்பை கடந்த 9ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். இதனால், ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்துக்கு நீதிபதி ஆஷா உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை தொடர்ந்து விஜய்யின் ஜன நாயகன் படம் விரைவில் திரைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி நீதிபதி பி.டி.ஆஷாவின் தீர்ப்பை எதிர்த்து சென்சார் போர்டு உடனடியாக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, தனி நீதிபதி ஆஷா பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பின்பு தணிக்கை வாரியமும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது. மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்றும் உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

அதைத்தொடர்ந்து மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சார்பிலும், படத் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில், படத்தின் சென்சார் சான்றிதழ் கோரிய வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.

ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்த தனி நீதிபதி பி.டி ஆஷா உத்தரவை ரத்து செய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். தனி நீதிபதி பி.டி ஆஷா உத்தரவை ரத்து செய்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

தணிக்கை வாரியம் பதிலளிக்க தனி நீதிபதி தீர்ப்பில் அவகாசம் தரப்படவில்லை. தணிக்கை வாரியம் மேல்முறையீடு சென்றது சரி என்றும் பட தயாரிப்பு நிறுவனம் தங்கள் கோரிக்கை மனுவை திருத்தம் செய்துகொள்ளலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

நீதிமன்ற தீர்ப்பில், "ஜனநாயகன் படத்தில் உள்ள சில வசனங்கள் நாட்டில் மதப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மத மோதலை தூண்டுவதாக 'ஜனநாயகன்' படத்தில் சில வசனங்கள் இடம்பெற்றுள்ளன. புகாரின் அடிப்படையில் படம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+