கமல்ஹாசன் பெயர், புகைப்படத்தை வணிக ரீதியாக பயன்படுத்த தடை நீட்டிப்பு.. சென்னை ஐகோர்ட் அதிரடி!
சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் எம்.பியின் புகைப்படம் மற்றும் பெயரை வணிக ரீதியாக பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 'நீயே விடை' என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலக நாயகன் என்ற பட்டத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி-ஷர்ட்களையும், சட்டைகளையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தார்.

கமல்ஹாசன், எதிர்காலத்தில் அடையாளம் தெரியாத யாரேனும் தனது அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தினாலும், அவர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் வகையில் பொதுவான ஒரு தடையை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வர்த்தக ரீதியில் கமல்ஹாசனின் அனுமதியின்றி அவரின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கமல்ஹாசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எதிர்மனுதாரருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் தவறான முகவரி என திரும்ப வந்துள்ளதாகக் கூறினார். அதன் காரணமாக மின்னஞ்சல் மூலமாக நோட்டீஸ் அனுப்ப அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். வழக்கு தொடர்பாக தமிழ் நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டதாகவும் கமல்ஹாசன் தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, எதிர்மனுதாரருக்கு மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்ப கமல்ஹாசன் தரப்புக்கு அனுமதி அளித்தார். மேலும், கமல்ஹாசன் தரப்பு விரும்பும் பட்சத்தில் மனு குறித்து செய்தித் தாள்களில் இன்னும் விரிவாக விளம்பரம் செய்ய அறிவுறுத்தி வழக்கை பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
-
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications