“2 மாதம் தான் டைம்”.. அறநிலையத் துறைக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களின் வரவு, செலவு மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பான தணிக்கை அறிக்கைகளை அரசு இணையத்தில் பதிவேற்றும் பணியை இன்னும் 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில்களின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து கோயில்களின் வரவு- செலவு தொடர்பான தணிக்கை அறிக்கைகளையும் இணையதளத்தில் வெளியிட உத்தரவிடக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

High Court

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 6,931 கோயில்களின் தணிக்கை அறிக்கை விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய கோயில்களின் அறிக்கை விவரங்களும் விரைவில் பதிவேற்றப்படும் என்றும், முழுமையான தணிக்கை அறிக்கைகள் பின்னர் வெளியிடப்படும் என்வும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான மனுதாரர் டி.ஆர்.ரமேஷ், முழுமையான தணிக்கை அறிக்கைகள் இன்னும் பதிவேற்றப்படவில்லை என்றும், தற்போது வெளியிடப்பட்டுள்ள விவரங்களில் இடம்பெற வேண்டிய முக்கிய தகவல்கள் கூட இடம்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, தணிக்கைக்கு உட்பட்ட கோயில்களின் அறிக்கை விவரங்கள் இணையத்தில் பதிவேற்றும் பணியை இரண்டு மாதங்களுக்குள் முடித்துவிடுவதாக அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.பரணிதரன் தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்து தகவல்களையும் விரைவில் பதிவேற்ற உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+