நீதிமன்றங்களின் பணிச்சுமை குறைய இது தான் வழி! உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி புது யோசனை
சென்னை: சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டால் நீதிமன்றங்களின் பணி வெகுவாகக் குறையும் என உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற வருமான வரி தின விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், வருமான வரித்துறை பல்வேறு சமூக பொறுப்புமிக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பாராட்டி பேசினார்.

நீதிமன்றங்களின் பணி
சென்னையில் இன்று நடைபெற்ற வருமான வரி தின விழாவில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, முனீஸ்வர் நாத் பண்டாரி, சட்டங்களை எளிமையாக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றார். சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டால் நீதிமன்றங்களின் பணி வெகுவாகக் குறையும் என்றார் அவர்.

சமூகப் பொறுப்பு
வருமான வரித்துறையின் பல்வேறு சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் அதிகரித்து வருவதால், கண்காணிப்பு இல்லங்களில் உள்ள 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அறிவுறுத்தினார்.

தமிழகம் 4-வது இடம்
அவரைத் தொடர்ந்து வருமான வரித்துறையின் பல்வேறு சாதனைகள் மற்றும் புதுமையான நடவடிக்கைகள் பற்றி பேசிய, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன், நாட்டின் நேரடி வரி வருவாய்க்கு நான்காவது மிகப் பெரிய பங்களிப்பை தமிழகம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழிசை பங்கேற்பு
இந்த விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியுடன் மற்றொரு சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கலந்துகொண்டார். நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் வழங்கப்பட்ட விருதை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications