தேவாலயத்துக்கு சொந்தமான நில மோசடி புகார்.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில் ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேவாலயத்துக்கு சொந்தமான நிலங்களை போலி ஆவணங்களை சமர்ப்பித்து குறைந்த விலைக்கு வாங்கி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவை சேர்ந்த வீர செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2001- ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் தமிழக அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி திருச்செந்தூர் புனித தோமையார் அப்போஸ்தலர் தேவாலய நிலத்தை சுமார் 10 அரை கிரவுண்டு நிலத்தை சுப்பையா என்பவருடன் இணைந்து போலி அதிகார பத்திரத்தை சமர்பித்து வழிகாட்டு மதிப்பீடுகளை குறைத்து பத்திரப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

Anitha Radhakrishnan

மேலும் இதனால் பதிவுத் துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட சொத்தை வங்கியில் அடைமானம் வைத்தும் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை. எனவே இந்த மனு மீது உரிய விசாரணை நடத்த நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பி லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், புகார் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணை தொடர்பான அறிக்கையினை இரண்டு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் வழக்கு விசாரணையையும் இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+