ஊட்டி, கொடைக்கானல் போறவங்க கவனிங்க.. செப்டம்பர் 30 வரை இ-பாஸ் கட்டாயம்.. நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறையை செப்டம்பர் 30 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களான உதகை , கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். இதன் காரணமாக சீசன் நேரங்களில் கடுமையான வாகன நெரிசல் , விடுதி அறைகள் பற்றாக்குறை, உணவு பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன.

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகையை நெறிப்படுத்தும் வகையில் இ-பாஸ் முறையை அமல்படுத்த உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை உதகை மற்றும் கொடைக்கானல் செல்வோர் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் epass.tnega.org என்ற இணையதளம் வாயிலாக, இ-பாஸ் பெறும் நடைமுறை அமலுக்கு வந்தது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தொலைபேசி எண்களை அடிப்படையாக வைத்து விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த மே 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இ - பாஸ் நடைமுறை வரும் 30 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் பெறும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இ- பாஸ் நடைமுறையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என்று அரசு தரப்பு வாதம் முன்வைத்தது. இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது குறித்து நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என சென்னை ஐ.ஐ.டி., பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் இ பாஸ் நடைமுறையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு உத்தரவு அளித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications