சீமை கருவேல மரங்களை அகற்ற 2 வாரத்தில் நிதியை விடுவிக்க வேண்டும்.. வைகோ தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் ஆணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீமைக் கருவேல மரங்களை அகற்ற கனிம நிதியை இரண்டு வாரங்களில் விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.

Seemai Karuvelam Trees

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருவேல மரங்களை அகற்ற மாவட்ட கனிம நிதியில் இருந்து ரூ.5 கோடி ஒதுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில அறிக்கை தாக்கல் செய்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், "சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு கனிம நிதியை விடுவிப்பது தொடர்பாக மாவட்ட குழுக்களின் ஒப்புதலை பெற்று நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிதியின் பயன்பாடு தொடர்பாக சில கட்டுப்பாடுகள் உள்ளதால், நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த வைகோ, "சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றத்துக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நீதிமன்ற உத்தரவுகள் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறதா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள், "சீமைக் கருவேல மரங்களை அகற்ற கனிம நிதியை பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தடையும் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. அதனால் விதிகளை காரணம் காட்டி நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது. சீமைக் கருவேல மரங்களை அகற்ற கனிம நிதியை இரண்டு வாரங்களில் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+