பாத்ரூம் கூட போக விடாமல் டார்ச்சர்? ஜெம் வீரமணி மகள் அர்ச்சனா மனுவுக்கு SIT பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா தொடர்ந்த மனித உரிமை மீறல் வழக்கில், சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள தனது மகனைப் பார்க்க விமானத்தில் செல்ல இருந்த வீரமணியின் மகள் அர்ச்சனாவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Gem Veeramani case

எந்தவொரு காரணமும் கூறாமல், விமானப் பணியாளர்கள் தன்னை விமானத்தில் இருந்து இறக்கி விட்டதாகவும், அதன் பிறகு சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் கூறி, ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், எந்தவொரு சம்மனும், நீதிமன்ற வாரண்ட் உத்தரவும், லுக் அவுட் நோட்டீஸும் இல்லாமல் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தன்னை அழைத்துச் சென்றதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் தாம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் மயங்கி விழுந்துவிட்டதாகவும், பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மீண்டும் ஆஜராகும்படி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அனுப்பியுள்ள சம்மனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணையின்போது, தன்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படாத அர்ச்சனாவை, விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அவர் கழிவறையைக் கூட பயன்படுத்த அனுமதிக்காமல் நீண்ட நேரம் காத்திருக்க வைத்திருந்ததால், அவர் சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்திலேயே மயங்கி விழுந்ததாகவும், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணைக்கு சம்மன் கொடுக்க அர்ச்சனா வீட்டுக்குச் சென்றபோது, அவர் இல்லாத காரணத்தால், வீட்டுக் காவலாளியிடம் சம்மன் கொடுக்கப்பட்டதாகவும், சம்மனை மனுதாரரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு காவல்துறை அனுப்பியதாகவும், அதன்பிறகு மனுதாரர் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.

அதனால், மனுதாரர் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து விமான நிலையத்துக்குச் சென்று, விசாரணைக்கு அழைத்து வந்ததாகவும் கூறினார். விசாரணையின் போது மனுதாரர் அர்ச்சனா மயங்கி விழுந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்றும் காவல் துறை தரப்பில் கேட்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அர்ச்சனாவின் மனுவுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+