ஜெம் வீரமணி வழக்கு: தலைமறைவான பிரகாஷ் முன்ஜாமீன் மனுவுக்கு போலீசார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் கண்ணையா மகன் பிரகாஷ் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு போலீசார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகளில் ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், லாசர், கணேசன், பாபு, பார்த்திபன் மற்றும் சக்திவேல் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Veeramani

இந்நிலையில், வீரமணிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை விற்று, இந்த வழக்கை மூடி மறைக்க போலீஸ் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், இதற்கு ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் உடந்தையாக செயல்பட்டதாகவும், இதற்காக பிரகாஷுக்கும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போலீசாரால் தேடப்படும் நபரான பிரகாஷ் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுவதால், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டை முடக்கி, இந்​தி​யா​வுக்கு அழைத்து வரும் நட​வடிக்​கையை சிறப்பு புலனாய்வுக் குழு போலீ​சார் முடுக்கி விட்​டுள்​ளனர்.

இதன் தொடர்ச்சியாக, பிரகாஷுக்கு முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், பிரகாஷ் தரப்பில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரகாஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி ஆகியோர் ஆஜராகினர். இதையடுத்து, பிரகாஷின் முன்ஜாமீன் மனுவுக்கு போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 20 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+