“செல்வ வரி வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்தது சரிதான்”- வருமான வரித்துறை அப்பீலை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்வ வரி வழக்கில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு சரிதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல ஆண்டுகளாக செல்வ வரி (Wealth tax) கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை எனக் கூறி ஜெயலலிதா மீது வருமான வரித் துறை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி வருமான வரித் துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார்.

High Court Upholds Tribunal Order Exonerating Jayalalithaa in Wealth Tax Case

இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்தது. மேல்முறையீட்டுத் தீா்ப்பாய உத்தரவை எதிா்த்து வருமான வரித் துறை கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குகளை தாக்கல் செய்தது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது சட்டப்பூர்வ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனம், ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பிறகே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால், வருமான வரித் துறையின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள், ஜெயலலிதா வீட்டில் சசிகலா உள்ளிட்டோர் வசித்த நிலையில், இந்த செல்வங்கள் யாருக்கு சொந்தமானவை என்பதை வருமான வரித்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே, ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது தவறு எனவும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அவரை விடுவித்தது சரிதான் என்று கூறி வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த 3 மேல் முறையீட்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+