முதலமைச்சர் விஜய் கான்வாயில் புகுந்த நபர்.. சென்னை ஈசிஆர் சாலையில் அதிர்ந்த போலீஸ் பாதுகாப்பு வளையம்
சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் முதலமைச்சர் விஜய் காரின் பாதுகாப்பு வளையத்திற்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. போலீசாரின் அதிரடி பாதுகாப்பையும் மீறி கான்வாய் வாகனங்களுக்கு நடுவே அந்த நபர் நுழைந்ததால் அங்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி கிளம்பியுள்ளது.. உடனடியாக அந்த நபரை பிடித்து அப்புறப்படுத்திய சென்னை போலீசார், இந்த அதிரடி ஊடுருவல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..
தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று தனது பணிகளை கவனித்து வருகிறார்.. எனினும், முதல்வர் விஜய்யின் தினசரி பயணத்தின் போது கிழக்கு கடற்கரை சாலை மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாகவும் புகார்கள் எழுந்தன.

முதலமைச்சர் விஜய்
இது முதல்வரின் கவனத்துக்கு சென்ற நிலையில், தனது பயணத்தால் ஒரு நிமிடம் கூட சாமானிய மக்கள் சாலையில் காத்திருக்கக் கூடாது என, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, தனது கான்வாய் செல்வதற்காகப் பொதுமக்களின் போக்குவரத்தை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது என்றும் மக்களுக்குக் குறைந்தபட்ச இடையூறு கூட ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதன் விளைவாக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை 'டியூன் லைன்' எனப்படும் சிறப்பு மாற்றுப் போக்குவரத்து முறையை அமல்படுத்தியுள்ளது.
கான்வாய் புதிய ஏற்பாடுகள்
இந்த புதிய ஏற்பாட்டின்படி, முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் சாலையின் ஒரு குறிப்பிட்ட தனிப் பாதையில் மட்டுமே செல்லும். அதே நேரத்தில், சாலையின் மறுபுறம் மற்றும் இதர பாதைகளில் பொதுமக்களின் வாகனங்கள் வழக்கம்போல் எந்தவொரு தடங்கலும் இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படும். முதலமைச்சருக்காக ஒட்டுமொத்தப் போக்குவரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் பழைய விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் முதல்வரின் கார் அணிவகுப்பு சென்றாலும், மறுபக்கம் மற்ற வாகனங்கள் எங்கும் நிறுத்தப்படுவதில்லை. சிக்னல்களில் பொதுமக்கள் தேவையின்றி காக்க வைக்கப்படுவதில்லை. முதல்வர் அந்த பகுதியை கடந்த பிறகு, அந்த கூம்புகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மீண்டும் வழக்கமான போக்குவரத்தை போலீஸார் அனுமதிக்கின்றனர்.
சென்னை ஈசிஆர் சாலை
எனினும், அவர் தினந்தோறும் தலைமை செயலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களை நேரில் சந்திப்பதும், காரின் கண்ணாடி கதவுகளை இறக்கிவிட்டு தொண்டர்களை பார்த்து கையசைத்து செல்வதும் வழக்கமாக நடந்து வருகிறது.. இதனால் சென்னை தலைமை செயலகத்தின் வாசல் அருகே தினமுமே ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று முதலமைச்சரை பார்த்து செல்கிறார்கள்..
இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் தலைமை செயலகத்தில் இருந்து தனது அரசு பணிகளை முடித்துக்கொண்டு காரில் முதலமைச்சர் விஜய் தனது வீட்டிற்கு புறப்பட்டார்.
யாரந்த இளைஞர்?
முதலமைச்சரின் கார் சென்னை சாலையில் போலீஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தது.. அப்போது பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து சென்ற அந்த கான்வாய் நடுவே திடீரென ஒரு இளைஞர புகுந்தார்.. முதலமைச்சர் விஜய்யை மிக அருகில் பார்க்க வேண்டும் என்ற முயற்சியில் அந்த இளைஞர் திடீரென கான்வாய் வாகனங்களுக்கு இடையே நுழைந்ததால் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்..
உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் அந்த வாலிபரை வேகமாக பிடித்து அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்.. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.. பிடிபட்ட அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் அந்த நபருக்கு பலத்த எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.. முதலமைச்சரின் பாதுகாப்பு வளையத்திற்குள் வாலிபர் புகுந்த சம்பவம் சென்னையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது..
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications