நடிகை மீனாவுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் பொன்முடி! பக்கபலமாக நிற்கும் டான்ஸ் மாஸ்டர் கலா!
சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் அண்மையில் காலமானதை அடுத்து அவரிடம் திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் துக்கம் விசாரித்து வருகின்றனர்.
அந்த வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனது மனைவி விசாலாட்சியுடன் நடிகை மீனாவின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
தைரியமாக இருக்குமாறும் கவலைப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் நடிகை மீனாவுக்கு ஆறுதல் வார்த்தை கூறியிருக்கிறார்கள்.

மீனா கணவர்
நடிகை மீனாவின் கணவர் வித்யசாகர் அண்மையில் உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பிரச்சனை தொடர்பாக கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிகழ்வு திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் நடிகை மீனாவின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அளித்தது.

ஆறுதல் கூறிய அமைச்சர்
மீனா கணவர் வித்யாசாகர் காலமான அன்று அமைச்சர் பொன்முடி சென்னையில் இல்லாததால் நேற்று முன் தினம் நடிகை மீனாவின் வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்திருக்கிறார். அப்போது மீனா கண் கலங்கியபடி தனது கணவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகளை பற்றியும் அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது தொடர்பாகவும் விவரித்தார். இதையடுத்து அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் மீனாவுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார்கள்.

நடன மாஸ்டர்
அமைச்சர் பொன்முடியுடன் சென்னை மாநகராட்சி துணை மேயர் சைதை மகேஷ்குமாரும் மீனாவிடம் துக்கம் விசாரித்தார். இவர்களை போலவே இன்னும் பல அரசியல் பிரமுகர்களும், திரைத்துறை பிரபலங்களும் நடிகை மீனாவின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதலும் கணவர் மறைவுக்கு இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் சில மாதங்கள்
நடிகை மீனாவுக்கு கணவர் மறைந்த துக்கத்திலிருந்து மீள்வதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. டான்ஸ் மாஸ்டர் கலா தான் நடிகை மீனாவுக்கு அக்காவாகவும், அம்மாவாகவும் உடனிருந்து அவரை கவனித்துக் கொள்கிறார். டான்ஸ் மாஸ்டர் கலா குடும்பத்தினரும், நடிகை மீனா குடும்பத்தினரும் குடும்ப நண்பர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications