டாப் 20.. ஆளுநரை நியமிக்க முதல்வரை ஆலோசிக்க வேண்டும்.. அதிமுக தேர்தல் அறிக்கையில் ஹைலைட்டே இதான்!
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கியமான 20 பாயிண்டுகள் பற்றி பார்க்கலாம்.
நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தங்கள் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய 7 தொகுதிகள் போக 32 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம்காண்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை 20ஆம் தேதி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 16 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விரு கட்சிகளும் 18 தொகுதிகளில் நேரடியாக மோதிக் கொள்கின்றன.
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: இந்நிலையில் இன்று சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
1. மகளிர் உரிமைத் தொகையாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்க ஒன்றிய அரசை அதிமுக வலியுறுத்தும்.
2. குடியுரிமை திருத்த சட்டத்தில் ஈழத் தமிழர்கள், முஸ்லிம்களை உட்படுத்த வலியுறுத்தப்படும்.
3. ஆளுநர் பதவி நியமன முறை குறித்து கருத்து கேட்க வேண்டும். ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்.
4. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த வலியுறுத்தப்படும்.
5. குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.
6. உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
7. நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும்.
8. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டமான 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரிக்க மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
9. நீட் தேர்வுக்கு மாற்றாக 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
10. நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.
11. விவசாயிகள் பயன்பெற தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
12. சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்பு ஒதுக்கீடு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
13. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்துவோம்.
14. தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
15. குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லீம்கள், ஈழத்தமிழர்களை உட்படுத்த வேண்டும்.
16. மத்திய அரசின் திட்ட நிதி பகிர்வு 60:40 என்ற விகிதத்திற்கு பதிலாக 75:25 சதவீகிதமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
17. பாலாற்றில் தடுப்பணை கட்டும் அந்திர அரசின் முயற்சிக்கு அதிமுக தொடர்ந்து எதிர்க்கும்.
காவிரி குண்டாறு வைகை இணைப்புத்திட்டம் செயல்படுத்தப்படும்.
கோவதாவரி- காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
18. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிரிமிலேயர் வருமான வரம்பு மத்திய அரசால் 8 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை 12 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
19. நெல் குவிண்டாலுக்கு 5 ஆயிரம் ரூபாயும், கரும்பு டன்னுக்கு 6 ஆயிரம் ரூபாயும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
20. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications