இந்தியில் தகவல்கள்.. தேர்தல் ஆணைய இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு! கடும் எதிர்ப்பு
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்டில், தமிழக வேட்பாளர்கள் தொடர்பான விவரங்கள் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த தகவல்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் இருப்பதால், கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல் தொடர்பான விவரங்கள் தமிழில் இல்லை என்பதால், அரசியல் தலைவர்கள் இது குறித்த கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
தமிழகத்திற்கு ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தொடங்கியிருக்கின்றனர். இன்று காலை 7.30 மணி நிலவரப்படி மொத்தம் 573 வேட்பாளர்களின் தகவல்கள் https://affidavit.eci.gov.in எனும் தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்டில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன.
வேட்பாளர்களின் விவரம்
ஆனால், வேட்பாளர்களின் பெயர், தொகுதி உள்ளிட்ட விவரங்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. மாற்று மொழியாக இந்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல் தொடர்பான விவரங்களை மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டும் எனில், தமிழில் விவரங்கள் இருப்பது முக்கியம். ஆனால், தமிழ் தவிர்த்து மற்ற மொழிகளில் விவரங்கள் இடம்பெற்றிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழுக்கு இடமில்லை
ஏற்கனவே கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரம்பூரில் தவெக விஜய், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா என முக்கிய நபர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர். இவர்களின் தகவல்கள் வெப்சைட்டில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. தகவல்கள் தமிழில் இருந்தாலும், அதை தேடி கண்டுபிடிக்க ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள்தான் இருக்கின்றன. எனவே தமிழ் மொழியில் வெப்சைட் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications