இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில்.. முதன்மை மொழியாக இந்தி மாற்றப்பட்டதால் அதிர்ச்சி
சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முதன்மை மொழி இந்திக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தின் முதன்மை மொழியாக ஆங்கிலம் இருந்த நிலையில், இந்திக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் உள்ளே சென்ற பிறகே ஆங்கில மொழிக்கு மாற்றம் செய்யும் வசதி உள்ளது. வானிலை மையத்தின் முதன்மை மொழி இந்திக்கு மாற்றப்பட்டு இருப்பதால் தென் மாநில மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதள பக்கத்தில் முதன்மை மொழியாக இந்தி மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை ஆங்கிலம் முதன்மை மொழியாகவும் இந்தியை தேர்வு செய்து மாற்றும் வகையில் இருந்த நிலையில், தற்போது இந்தி முதன்மை மொழியாக மாற்றப்பட்டுள்ளது. இணையதளத்திற்குள் சென்றவுடன் இந்தி மொழியிலான வானிலை மைய பக்கமே தோன்றுகிறது. அதன்பிறகு ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்யும் விதமாக ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய இணையதள பக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்து இருக்க கூடிய இந்த மாற்றம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநில மக்கள் வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இந்தி திணிக்கப்பட்டுள்ளது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தமிழ்நாடு உள்ளிட தென் மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், வானிலை ஆய்வு மைய இணையதளபக்கத்தில் கொண்டு வந்துஇருக்க கூடிய இந்த மாற்றம் விவாதப்பொருளாகியுள்ளது. வானிலை ஆய்வு மைய இணையதள பக்கத்தை ஏற்கனவே இருந்தது போல ஆங்கில மொழியை முதன்மை பக்கமாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் அனைத்தும் இந்த இணையதளம் மூலமே பகிரப்படுகிறது. இந்த வானிலை மையத்தில் பகிரப்படும் தகவல்கள் சவாலான காலநிலை சமயத்தில் மக்களுக்கு பெரும் பயனளிக்க கூடியதாக இருந்தது. இந்த சூழலில்தான் முதன்மை மொழியாக இந்தி மாற்றப்பட்டு இருப்பது இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துபர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதாக உள்ளது. அதேநேரத்தில் மண்டல வானிலை மையம் உள்பட பிராந்திய வானிலை மையங்களுக்கான இணையதள பக்கமானது முன்பை போலவே ஆங்கிலமே முதன்மை மொழியாக உள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications