சரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக
Recommended Video
சென்னை: பாஜகவுக்கு ஒரு பிரச்சினை என்றால் நடிகர் ரஜினிகாந்த் அப்போதெல்லாம் கருத்து தெரிவிப்பது வழக்கம்தான் என்று, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
"நம்ம நாடு என்று கிடையாது.. எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால், அந்த நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கு நல்லது. ஆனால் துரதிஷ்டவசமாக நமது நாட்டில் பொதுவான ஒரு மொழியை அமல்படுத்த முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல வட மாநிலங்களில் கூட இந்தியை பொதுவான ஒரு மொழியை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைதான் நமது நாட்டில் நிலவுகிறது." இவ்வாறு ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜெ.அன்பழகன் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் பாஜகவுக்கு எப்போதெல்லாம் பிரச்சினைகள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாமே அவர் ஆதரவாக பேட்டி அளிப்பது வழக்கமாகிவிட்டது.

இதேபோன்ற கருத்துக்களை அவரை கர்நாடகாவில் போய் சொல்லச் சொல்லுங்கள். கர்நாடகாவிலும் இந்திக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சுபஸ்ரீ பேனர் விழுந்து பலியானது தொடர்பாக ரஜினிகாந்த் ஏதாவது சொன்னாரா? சொல்லவில்லை.
அவர் கருத்து தெரிவிப்பது எல்லாமே பாஜகவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். காஷ்மீர் தொடர்பாக கருத்து சொல்கிறார், இப்போது இந்தி தொடர்பாக கருத்து சொல்லி உள்ளார். தான் இந்திக்கு ஆதரவாக இல்லை என்பதை மட்டும் அவரை சொல்லச் சொல்லுங்கள். ரஜினிகாந்த் பாஜகவின் ஊதுகுழலாக தான் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications