சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்ல ஜிங்கி.. அடுத்து உங்கி.. திணிச்சா இப்படி திணிக்கனும்... பரபரக்கும் விளம்பரம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே நாடு.. நாடு முழுவதும் இந்தி மட்டுமே ஒரே மொழியாக இருக்க வேண்டும்.. அமித் ஷா சர்ச்சை பேச்சு!-வீடியோ

    சென்னை: யாருமே இல்லாத கடையில யாருக்காக டீ ஆத்துறே.. இது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக புழங்கி வரும் ஒரு பழமொழி. இந்த விளம்பரத்தைப் பார்த்தபோது அதுதான் நமக்கு நினைவுக்கு வருகிறது.

    எப்படியாவது இந்தியை திணித்து விட வேண்டும் என்ற வேகம்தான் மத்தியில் ஆட்சியில் உள்ளோருக்கு (அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி.. இதுபோன்ற விஷயத்தில் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்) உள்ளதே தவிர, அதை அன்பாக கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வமே இருப்பதில்லை. இதனால்தான் இந்தி என்றாலே கடுப்பாகி விடுகிறார்கள் பல மாநில மக்கள் (தமிழகம் மட்டுமல்ல.. பல்வேறு மாநிலங்களும் இன்று இந்தி திணிப்புக்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டன).

    hindi words in tamil advertisement make laughter among tamils

    இன்று இந்தி தினத்தையொட்டி நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டும் என்று பேசியிருக்கிறார் அமித்ஷா. உள்துறை அமைச்சராக இருக்கும் அவர், நமது நாட்டின் பன்முக பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை ஓரம் கட்டி விட்டு இந்திக்கு ஆதரவாக கொடி பிடித்திருப்பது ஆச்சரியத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

    சரி அதை விடுங்க.. ஒரு பத்திரிகை விளம்பரம். தமிழில் கொடுக்கப்பட்ட விளம்பரம். அதில் இந்தி வாசகத்தையும் தமிழிலேயே போட்டுள்ளனர். எப்படி தெரியுமா...?

    "ஜிங்கி மெக்னட் தேஷ் கா ஆதார்
    உங்கி பென்ஷன் கா சப்னா ஆதார்"

    இதுதாங்க அந்த வாசகம். இதுக்கு ஏதாவது அர்த்தம் புரிந்ததா.. அந்தக் கவலையெல்லாம் இந்த விளம்பர வாசகத்தை தமிழில் எழுதியவர்களுக்கே இல்லை என்கிறபோது நமக்கு மட்டும் எப்படி வரும். எப்படியோ திணிச்சா போதும் என்ற ஒரே நோக்கம்தான் இதில் தெரிகிறது. இதற்குப் பதில் அந்த வாசகத்தை தமிழில் மொழி பெயர்த்து போட்டிருந்தால் நாலு பேருக்கு நல்ல கருத்தாவது போய்ச் சேர்ந்திருக்கும்.

    எப்படியாவது இந்தியைத் திணிக்க.. இப்படித் துடிக்கிறதே மத்திய அரசு.. ஸ்டாலின் ஆவேசம்எப்படியாவது இந்தியைத் திணிக்க.. இப்படித் துடிக்கிறதே மத்திய அரசு.. ஸ்டாலின் ஆவேசம்

    என்னத்த சொல்றதுன்னே தெரியலை போங்க.

    English summary
    Hindi words in Tamil advertisement in news papers have made laughter among Tamils in TN.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X