Zoho ஆப்பிற்கு தமிழ் பெயரா? நல்லாவே இல்லை மாத்துங்க.. ஸ்ரீதர் வேம்புவிற்கு வடஇந்தியர்கள் நெருக்கடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸோஹோ நிறுவனத்தின் சாட்டிங் செயலியான அரட்டை செயலியின் பெயரை தமிழில் இருந்து மாற்ற வேண்டும் என்று வடஇந்தியர்கள் பலர் அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக கடுமையாக செயல்பட்டு வருகிறார். அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக கடுமையான வரிகளை விதித்து உள்ளது. கடந்த ஜூலை மாதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% வரி விதித்தது. அதைத் தொடர்ந்து, ஒரு வாரத்திற்குப் பிறகு மேலும் 25% வரி விதித்து, ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதைக் காரணமாகக் கூறியது. இந்த வரி விதிப்புகள், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைச் சிக்கலாக்கியது. இதனால் இரண்டு நாட்டு உறவு மேலும் பாதித்து உள்ளது.

zoho

அதோடு கடந்த வாரம் புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு 100,000 டாலர் கட்டணத்தை டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த விசாக்களில் முக்கால்வாசி இந்தியர்கள் பெறுவதால், இந்த முடிவு இந்திய தொழில்நுட்ப ஊழியர்களையும் அவர்களது குடும்பங்களையும் மிகக் கடுமையாகப் பாதிக்கும்.

அமெரிக்காவிற்கு நோ - இந்தியாவிற்கு எஸ்

இந்த நிலையில் அமெரிக்காவில் உருவாக்கப்படும் செயலிகளுக்கு, பொருட்களுக்கு மக்கள் நோ சொல்ல தொடங்கி உள்ளனர். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எக்ஸெல் மற்றும் பவர்பாயிண்ட் பயன்பாடுகளுக்கு உள்நாட்டு தளமான 'ஸோஹோ'வுக்கு மாறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க பொருட்களை கைவிட்டு.. இந்தியப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு பின் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டார்.

zoho

அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் 'ஸோஹோ'வுக்கு மாறுகிறேன் - ஆவணங்கள், எக்ஸெல் மற்றும் பவர்பாயிண்ட் பயன்பாடுகளுக்கு நமது சொந்த இந்திய தளத்தை பயன்படுத்த போகிறேன். உள்நாட்டுப் பொருட்களை ஏற்றுக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில் அனைவரும் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ஸோஹோ வரவேற்பு

இந்த அறிவிப்பு, 'ஸோஹோ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்புவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினி வைஷ்ணவின் இந்த ஆதரவு, தங்களது பொறியாளர்களுக்குப் பெரிய மனஉறுதியைக் கொடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

zoho

இப்படிப்பட்ட நிலையில்தான் ஸோஹோ நிறுவனத்தின் சாட்டிங் செயலியான அரட்டை செயலியின் பெயரை தமிழில் இருந்து மாற்ற வேண்டும் என்று வடஇந்தியர்கள் பலர் அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

zoho

அரட்டை - தமிழ் பெயர் வேண்டாம்

வடஇந்திய நெட்டிசன்கள் பலர் இந்த அரட்டை என்ற பெயர் வசீகரமாக இல்லை, அந்த லோகோவில் உள்ள அ என்ற எழுத்து வசீகரமாக இல்லை. அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. ஸோஹோ கார்ப்பரேஷனின் தயாரிப்பான அரட்டை தற்போது அதிக அளவில் டவுன்லோடு ஆகி வருகிறது. அமெரிக்காவின் வாட்ஸ்அப்பிற்கு பதிலாக உள்நாட்டு மாற்றாக இது பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்திய செயலியான அரட்டையை பயன்படுத்த தொடங்கி உள்ளதாக அறிவித்த நிலையில் இது கவனம் பெற்றுள்ளது.

zoho

இப்படிப்பட்ட நிலையில்தான் வடஇந்தியர்கள் பலர் தமிழ் பெயர் வேண்டாம். அதை நீக்குங்கள் என்று ஸ்ரீதருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் இந்தியில் உள்ளன. பல செயலிகள் இந்தியில் உள்ளன. அதை எல்லாம் தென்னிந்தியர்கள் ஏற்றுக்கொள்ளும் போது ஒரு தமிழ் பெயரை வடஇந்தியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+