போதை பொருள் கடத்தல்! கனிமவள சுரண்டல்! திமுக அரசை கண்டித்து போராட இந்து முன்னணி அழைப்பு
சென்னை: போதை பொருள் நடமாட்டத்திற்கு எதிராக அரசை கண்டித்து போராட்டம் நடத்த வருமாறு இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. தமிழக இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி வருகிறார்கள். இதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
தி.மு.க.,வைச் சேர்ந்த ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் தனது காரில், 600 கிலோ குட்கா கடத்தியது சிவகிரி செக்போஸ்ட்டில் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது மனைவி தென்காசி மாவட்ட கவுன்சிலர்.
தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருள் கடத்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படுவது இது முதன்முறை அல்ல.
வேலுார் மாவட்டத்தில், ஒரே நாளில், 2,500 லிட்டர் கள்ளச்சாராயம், ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ச்சியான கைதுகள், சட்ட விரோத போதை பொருள் விவகாரத்தில் தி.மு.க.,வினர் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனரோ... இதை முதல்வரும் கண்டும் காணாமல் இருக்கிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
போதை கடத்தல் மட்டுமல்லாமல், கனிமவள சுரண்டல்களிலும், தி.மு.க.,வினர் சம்பந்தப்பட்டிருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வருகிறது.
எனவே, அரசை அழுத்தம் கொடுத்து செயல்பட வைக்க, மக்கள் போராட்டம் தவிர வேறு வழியில்லை. எனவே, மக்கள் பகிரங்கமாக போதை பொருட்களுக்கு எதிராக, செயலற்ற அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications