முதல்வரே.. செவ்வாய் வரைதான் டைம்.. "மைனரை" கைது பண்ணுங்க.. இல்லைனா.. அர்ஜுன் சம்பத் விதித்த கெடு!
சென்னை; செவ்வாய்கிழமைக்குள் U2 brutas என்ற யூடியூப் சேனலின் மைனர் விஜயை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கெடு விதித்து உள்ளது.
Recommended Video
U2 brutas என்ற யூடியூப் சேனல் யூ டியூபில் பிரபலமாக இருக்கும் சேனல் ஆகும்,. இதில் பெரும்பாலும் திராவிட கருத்து உடைய வீடியோக்கள், முற்போக்கு கருத்து கொண்ட வீடியோக்கள் வெளியிடப்படும்.
அதேபோல் இறை நம்பிக்கைக்கு எதிரான பல்வேறு வீடியோக்கள், வரலாற்று பேச்சுக்கள், இந்து புராணங்களில் இருக்கும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வைத்து இவர்கள் வீடியோ வெளியிடுவது வழக்கம்.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் U2 brutas என்ற யூடியூப் சேனலில் மைனர் விஜய் மூலம் தில்லை நடராஜர் பற்றி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் தில்லை நடராஜர் ஏன் காலை தூக்கி நிற்கிறார் என்பதை விளக்கி வீடியோவில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு இதற்கு வரலாற்று ரீதியாக சில எடுத்துக்காட்டுகளும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வீடியோ சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக பாஜகவினர், இந்து மக்கள் கட்சியினர் விமர்சனம் வைத்தனர்.

பாஜக
இதை பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மறைமுகமாக விமர்சனம் செய்து இருந்தார். மத கோட்பாடுகள் மற்றும் இறைநம்பிக்கையை அவதூறாகப் பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளார் சிலர்! ஆளும் கட்சியின் ஆசி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இதுபோன்ற அவதூறுகளைக் கண்டுகொள்ளாமல் அரசு ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதில் அண்ணாமலை "சிலர்" என்று கூறியது இந்த சேனலைதான் என்று கூறப்பட்டது.

இந்து மக்கள் கட்சி
அதேபோல் இந்து மக்கள் கட்சி சார்பாகவும் இது தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் இந்த வீடியோவிற்கு எதிராக பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் இந்து உணர்வுகளையும், தொன்றுதொட்டு இருந்துவரும் ஆன்மிக உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் காயப்படுத்த வேண்டும் என்று சிலர் செயல்படுகிறார்கள்.

கெட்ட சிந்தனை
தீய நோக்கத்துடன் செயல்பட்டு அதன் மூலம் சமூகத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட சிந்தனையோடும் சிலர் கெடு மதியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். U2 brutas என்ற யூடியூப் சேனலில் தில்லை நடராஜரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி உல்ளனர். உடனே அந்த சேனலில் பேசும் மைனர் விஜய் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து தெய்வங்களைப் போற்றும் மிகப் பெரும்பான்மை மக்கள் வாழும் நாட்டில் இப்படி பேசுவது தவறு என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்து மக்கள் கட்சி கெடு
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பாகவும் இது தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், தமிழ்நாடு அரசுக்கு இந்து மக்கள் கட்சி புதிய கெடு விதித்து உள்ளது. அதில், செவ்வாய்க்கிழமைக்குள் U2Brutus மைனர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், முதல்வர் அவர்களே.. புதன்கிழமையன்று தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை முன், தமிழகத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் சிவபூஜை செய்யவுள்ளனர் என்று அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications