நடராஜரை அவமதிச்சுட்டாங்க! எச்.ராஜாவின் ஒற்றை ட்வீட் -U2 ப்ரூடஸ் யூடியூப் சேனல் மீது போலீசில் புகார்
சென்னை: இந்து மத கடவுளான நடராஜரை சமூக வலைதளத்தில் அசிங்கமாக பேசியதாக கூறி U2 ப்ரூடஸ் என்ற யூடியூப் சேனலை முடக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
Recommended Video
யூடியூபில் U2 ப்ரூடர் என்ற அரசியல் விமர்சன சேனலை நடத்தி வருபவர் மைனர் விஜய்.
தனது சேனலில் அரசியல் விமர்சனங்களை நகைச்சுவையாக தெரிவித்து வரும் இவர், பாஜக, நாம் தமிழர் மற்றும் இந்துத்துவ அமைப்புகளை விமர்சித்து வந்தார்.

இந்து அமைப்பினர் குற்றச்சாட்டு
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்துக்களின் முதன்மையான தெய்வமாக கருதப்படும் நடராஜர் குறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை மைனர் விஜய் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இந்த வீடியோ பல தரப்பட்ட இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டி வந்தனர்.

எச்.ராஜாவின் ட்வீட்
இந்த நிலையில், பாஜக மூத்த நிர்வாகியான எச்.ராஜா எந்த விளக்கமும் இன்றி ட்விட்டரில் "தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. சிவனை இகழ்ந்தவனை தமிழக அரசே உடனே கைது செய்." என பதிவிட்டு இருந்தார். இதில் யாரை கைது செய்ய வேண்டும்? என அவர் எந்த விளக்கமும் இன்றி குறிப்பிட்டு இருந்தார்.

இந்து மக்கள் கட்சி புகார்
இதனை தொடர்ந்து சென்னை ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகரில் வசிக்கும் இந்து மக்கள் கட்சியின் சென்னை மாநகர தலைவர் கண்ணன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று U2 ப்ரூடஸ் யூடியூப் சேனல் மீது புகாரளித்தனர்.

மைனரை கைது செய்ய கோரிக்கை
அந்த சேனலை முடக்கக்கோரியும், வீடியோவை வெளியிட்ட மைனர் விஜயை கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட ஆதம்பாக்கம் காவல்துறையினர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications