ம்ஹூம்.. பிப்.14-ல் காதலர் தினத்துக்கு எதிராக பசுவை கட்டிப் பிடித்தே தீருவோம்.. அர்ஜூன் சம்பத் அடம்!
பிப்ரவரி 14-ந் தேதி பசு அரவணைப்பு தினம் கொண்டாடுவோம் என்கிறார் அர்ஜூன் சம்பத்.
சென்னை: பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்துக்கு எதிராக பச்சுக்களைக் கட்டிபிடித்து கொண்டாடுவோம் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 14-ந் தேதி உலக நாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தின கொண்டாட்டங்களுக்கு பொதுவாக வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். சில இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்களில் வன்முறைகளும் நிகழ்வது உண்டு.

இந்நிலையில் மத்திய கால்நடைத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விலங்குகள் நல வாரியம் திடீரென ஒரு அறிவுறுத்தலை விடுத்தது. அதாவது பிப்ரவரி 14-ந் தேதி, பசுக்களை கட்டிப் பிடிக்கக் கூடிய வகையில் பசு அணைப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
விலங்குகள் நல வாரியத்தின் தலைவர் எஸ்.கே.தாத்தா தமது அறிக்கையில் கூறியிருந்ததாவது: மேற்கத்திய நாடுகளின் கலாசார தாக்கங்களால் நமது வேதகால பண்பாடு என்பது அழிந்து வருகிறது. நமது பாரத தேசத்தின் கலாசாரம், பண்பாடு ஆகியவை மேற்கத்திய கலாசார தாக்கத்தால் மறக்கப்பட்டு வருகிறது.
பசுக்கள் நமது வாழ்வியலில் அதிக பலன்களைத் தருகின்றன. பசுக்களை நாம் அரவணைப்பதால், கட்டிப் பிடிப்பதால் மன ரீதியான வளம் அதிகரிக்கும். இது தனிநபர்களுக்கு மட்டும் அல்லாமல் சமூகத்திலும் கூட மகிழ்ச்சியை உருவாக்கும். இதனால்தான் பசுவை நேசிப்பவர்கள், மதிப்பவர்கள் வரும் பிப்ரவரி 14-ந் தேதியை பசுவை அணைக்கின்ற, கட்டிப்பிடிக்கின்ற தினமாக கொண்டாடுங்கள். மேற்கத்திய நாட்டு கலாசாரத்தால் வேதகால பண்பாடு அழிந்து வருகிறது. நம் கலாசாரமும் பண்பாடும் மறக்கக்கடிக்கப்பட்டது. பசுக்கள் ஏராளமான பலன்களைத் தருவதால், பசுவை கட்டிப்பிடிப்பது மன ரீதியான வளத்தை அதிகரிக்கும். இதனால் தனி நபர்கள் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எனவே பசு மீது நேசம் கொண்டவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுங்கள். இவ்வாறு எஸ்கே தத்தா கூறியிருந்தார்.
இந்த பசு அணைப்பு தினத்துக்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்பும் எழுந்தன. பசு அணைப்பு தினத்தை முன்வைத்து கிண்டலான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இதனையடுத்து இந்த அறிவுறுத்தலை விலங்குகள் நல வாரியம் வாபஸ் பெற்றது.
ஆனால் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தோ, பசுக்களை கட்டிப்பிடித்தே தீருவோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அர்ஜூன் சம்பத் கூறியிருப்பதாவது: பிப்-14 வேலன்டைன் டே ஆபாச கலாச்சார பண்பாட்டு சீரழிவு நிகழ்ச்சிகளுக்கு பதிலாக விலங்குகள் நல வாரியம் அறிவித்த "பசு அரவணைப்பு தினம்" தற்பொழுது வாபஸ்! இந்து மக்கள் கட்சி சார்பில் பசு அரவணைப்பு தினம் கடைபிடிக்கப்படும்! தமிழர்களின் தெய்வம் பசுமாடு அதை கட்டிப்பிடித்து வணங்குவோம்! இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications