ஸ்டாலின் அங்க மட்டும் ஏன் போகல? சர்ச், பள்ளிவாசலுக்கு தான் போவாரா? வரிந்துகட்டி வந்த இந்து முன்னணி!
சென்னை : பிரதமர் மோடியுடன் சென்னையில் நேற்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின். விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் செல்லவில்லை. ராமகிருஷ்ண மடத்தின் ஆண்டு விழாவை புறக்கணித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அந்நிய மத நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தான் செல்வாரா? என இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு வருகை புரிந்தார். விவேகானந்தர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். இதையடுத்து விவேகானந்தர் இல்லத்துக்கு சென்றார் பிரதமர் மோடி. முதல் இரு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியுடன் பங்கேற்ற முதல்வர் விவேகானந்தர் இல்லத்திற்கு தனது சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசுவை அனுப்பி வைத்தார்.
பின்னர், பல்லாவரத்தில் நடைபெற்ற திட்டங்கள் அடிக்கல் நாட்டுதல், மற்றும் முடிவுற்ற திட்டங்கள் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மட்டும் முதல்வர் ஸ்டாலின் வராதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து முன்னணி சென்னை மாநகர தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொழுநோயாளிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு விழா நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த விழாவிற்கான அழைப்பிதழை மடத்தின் சன்னியாசிகள் நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்து இருந்தனர். அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவேன் என உறுதிமொழி எடுத்த மாநில முதலமைச்சரின் இந்த புறக்கணிப்பு ஏற்புடையதல்ல. ராமகிருஷ்ண மட விழாவை புறக்கணித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அந்நிய மத நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தான் செல்வாரா? என இந்துக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.
கிருஸ்தவ பெந்தகொஸ்தே மாநாட்டில், சி.எஸ்.ஐ சர்ச் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதலமைச்சர் பாரம்பரியமிக்க ராமகிருஷ்ணா மட விழா புறக்கணிப்பு என்பது ஏற்புடையதல்ல. இதே போல் ரம்ஜான் நோன்பையும் புறக்கணிப்பாரா என்பதையும் முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications