'அரபிக் குத்து' பாடலில் விஜய் கழுத்தில் அது என்ன? சிலுவையா?.. இவர்தான் "ஜோசப்".. இந்து முன்னணி கிண்டல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரபிக்குத்தில் நடிகர் விஜய் அணிந்து இருக்கும் டாலரை வைத்து இந்து முன்னணி அமைப்பு அவரை வம்புக்கு இழுத்துள்ளது.

நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் வேகமாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், 1 பாடல் வெளியாகி ஏற்கனவே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியாகி இணையத்தையே அதிர வைத்தது. அனைத்து ரெக்கார்டுகளையும் அடித்து நொறுக்கி இந்த அரபிக் குத்து டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

அரபிக் குத்து

அரபிக் குத்து

நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருக்கும் இந்த பாடலின் வித்தியாசமான வரிகள் மக்கள் இடையே பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஹலமதி ஹபீபோ வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று நெட்டிசன்கள் பலர் இணையத்தில் தேடி வருகின்றனர். அதேபோல் பாடலில் வரும் மற்ற வரிகளின் அர்த்தத்தையும் பலர் இணையத்தில் தேடி வருகின்றனர். இந்த பாடல் தேசிய அளவிலும், வெளிநாடுகளிலும் கூட டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்து முன்னணி

இந்து முன்னணி

அதேபோல் இந்த பாடலில் விஜய் - பூஜா ஆடும் நடனமும் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பலர் இந்த வீடியோவை ஷேர் செய்து நடனத்தை பாராட்டி வருகின்றனர். இந்த பாடல் வரிகளின் அர்த்தத்தை பலர் தேடி வரும் நிலையில் இந்து முன்னணி இந்த பாடலில் இருக்கும் இன்னொரு விஷயத்தை கண்டுபிடித்து அதை சர்ச்சையாக்கி உள்ளது. அது விஜய் கழுத்தில் இருக்கும் சிலுவை போன்ற தோற்றம் கொண்ட டாலர்.

 சிலுவை

சிலுவை

விஜய் இந்த பாடலில் ஒரு காட்சியில் சிலுவை போன்ற நங்கூரம் டாலர் ஒன்றை அணிந்து இருக்கிறார். இதைத்தான் இந்து முன்னணி கிண்டலாக விமர்சனம் செய்துள்ளது. அதில் "ஜோசப்" விஜய் தன்னுடைய கழுத்தில் சிலுவை சின்னம் அணிந்து இருக்கிறார். இது வரவேற்கத்தக்க விஷயம். அவர் எந்த கவலையும் இன்றி, உறுதியாக தன்னுடைய மத அடையாளத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதில் என்ன தவறு இருக்க முடியும்.

வரவேற்பு

வரவேற்பு

இந்து முன்னணி இதை வரவேற்கிறது. எல்லோருக்கும் அவர்கள் தங்கள் மதத்தை பின்பற்றும் உரிமை இந்தியாவில் உள்ளது. இதை வைத்து யாரும் தவறான சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று இந்து முன்னணி கட்சியின் ட்விட்டர் பக்கம் விமர்சனம் செய்துள்ளது. விஜயை நேரடியாக கிண்டல் செய்யாமல் இந்து முன்னணி மறைமுகமாக கிண்டல் செய்வதாக விஜய் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். விஜய் சிலுவை அணிந்து இருப்பதை இந்து முன்னணி வேண்டுமென்றே சர்ச்சையாக்குவதாக விஜய் ரசிகர்கள் இதன் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

விமர்சனம்

விமர்சனம்

விஜய் ரசிகர்கள் பலர்.. அது சிலுவை அல்ல.. அது நங்கூரம். அப்படியே அவர் சிலுவை வைத்து இருந்தாலும் அது கதைக்காகவே இருக்கும். வழக்கமாக விஜய் பல படங்களில் பாடல் காட்சிகளில் கதைக்காக இப்படி சிலுவை அணிந்து இருக்கிறார். அது மட்டுமின்றி சிவகாசி படத்தில் நெற்றி முழுக்க விபூதியும் அணிந்து நடனம் ஆடி இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவரை மத ரீதியாக தாக்குவது மிகவும் தவறானது என்று விமர்சனம் வைத்துள்ளனர்.

ஜோசப் விஜய்

ஜோசப் விஜய்

முன்னாள் நடிகர் விஜய்க்கு எதிராக பாஜக மூத்த தலைவர் ஜோசப் விஜய் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். மெர்சல் பட சர்ச்சையின் போது விஜய் ஒரு கிறிஸ்துவர்.. அதனால்தான் அவர் ஜிஎஸ்டியை விமர்சனம் செய்து வசனம் வைத்துள்ளார். அவர் பெயர் ஜோசப் விஜய் என்று கூறி எச். ராஜா விஜயின் வாக்காளர் அடையாள அட்டையை பொதுவில் வெளியிட்டார். இது அப்போது சர்ச்சையானது. தற்போது அதேபோல் விஜயை இந்து முன்னணி அமைப்பு ஜோசப் விஜய் என்று அழைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+