இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனுக்கு மூச்சுத்திணறல்... மருத்துவமனையில் அனுமதி..!
சென்னை: இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்து முன்னணி அமைப்பின் நிறுவனத் தலைவரான ராமகோபாலன் 90 வயதை கடந்தவர் என்பதால் வயது முதிர்வு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்படுவது வழக்கம். கடந்த ஆகஸ்ட் மாதம் கூட அவருக்கு காய்ச்சலும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வழக்கமாக சிகிச்சை மேற்கொள்ளும் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் இன்று மாலை மீண்டும் ராம கோபாலனுக்குமூச்சு விட சிரமம் ஏற்பட்டிருக்கிறது. மூச்சுத்திணறலால் அவர் அவதிப்பட்டதை அடுத்து தாமதமின்றி ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவரை உள் நோயாளியாக அனுமதித்துள்ள மருத்துவர்கள் கொரோனா தொற்றை கண்டறியும் சோதனை நடத்தியிருக்கின்றனர். இன்னும் அந்த முடிவு வெளியாகாத நிலையில் அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராமகோபாலனை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும், மூச்சுத்திணறலால் அவதிப்படும் ராமகோபாலனுக்கு அவரது சுவாசப்பாதையை சீராக்குவதற்கான சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications