கோயில் கருவறைக்குள் ஒலிக்கப் போகும் மகளிர் குரல்! அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்களுக்கு சான்று!
சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சான்று வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, ஸ்ரீரங்கம், மதுரை, திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, ஆகிய 6 நகரங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. அங்கு சேரும் நபர்களுக்கு ஓராண்டு பயிற்சி தரப்படுவதுடன் ஆகம விதிகள், பூஜைகள் உள்ளிட்ட அனைத்தும் கற்றுக்கொடுக்கப்படும்.

இதுவரை ஆண்கள் மட்டுமே அர்ச்சகர் பயிற்சி பெற்ற நிலையில் இப்போது பெண்களும் அர்ச்சகர் பயிற்சி பெற முன் வந்துள்ளனர். அந்த வகையில் 2022 -2023ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சியின் அடிப்படையில் 3 பெண்கள் உட்பட 94 பேருக்கு சான்று வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்தாண்டும் 15 பெண்கள் வரை அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் ஆர்வமுடன் இணைந்துள்ளனர். இதனை இந்து சமய அறநிலையத்துறையின் புதிய மைல்கல்லாக பார்க்கும் அரசு, ஓதுவார் பயிற்சி பெற்ற 3 பெண்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பணிநியமனம் வழங்கும் எனத் தெரிகிறது.
அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்று பெற்ற ரஞ்சிதா, கிருஷ்ணவேனி, ரம்யா, என்ற 3 பெண்களும் ஸ்ரீரங்கத்தில் செயல்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இது குறித்து பெருமிதத்துடன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்.. எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் இது குறித்து கூறியிருப்பதாவது; ''பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.
ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்...'' எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications