"இந்து மதம்" அச்சுறுத்தல்.. உலகளவில் ஜாதி என்ற நோய் இருப்பதற்கு இந்தியாவே காரணம்..திமுக எம்பி ஆ.ராசா
சென்னை: இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று திமுக எம்.பி ஆ.ராசா பேசும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சு தேசிய அளவில் விவாத பொருளாகியுள்ளது. பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் அமைச்சர் உதயநிதியின் பேச்சை திரித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் தான், திமுக எம்.பி ஆ ராசா , இந்து மதம் குறித்தும் ஜாதி குறித்தும் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தி.மு.க எம்.பி ஆ.ராசா கூறியிருப்பதாவது; " ஜாதி என்ற சர்வதேச நோய்க்கு இந்தியாவே காரணம். ஜாதி அடிப்படையில் மக்களை இந்தியா மக்களை பிளவு படுத்துகிறது. ஜாதியை பயன்படுத்தி பொருளாதார ரீதியாகவும் மக்களை இந்தியா பிளவுபடுத்துகிறது. சமூக சீர்கேட்டிற்கு மட்டும் ஜாதி பயன்படுத்தப்படுவதில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் ஜாதியால் கட்டமைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்துயிசம் என்ற பெயரால் ஜாதியை பரப்புகின்றனர். இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. என்றார்.
காணொலி மூலமாக நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆ.ராசா இவ்வாறு பேசும் வீடியோ காட்சிகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் பகிர்ந்து கண்டனத்தை பதிவிட்டுள்ளார். தற்போது, இந்து மதத்திற்கு எதிராக ஆ.ராசா பேசும் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
DMK MP A Raja calls Hindu Religion a menace to India & the world.
— K.Annamalai (@annamalai_k) September 12, 2023
DMK is the principal reason for creating caste divide & hatred in TN, and the DMK MP has the audacity to blame Sanatana Dharma for the mess they made. pic.twitter.com/fqWO9FiQqY
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications