பள்ளிக்கரணையில் வரலாற்று முடிவு.. 'சென்னை ஒன்' டூ காமாட்சி மருத்துவமனை.. ரோடுக்கு பதில் மேம்பாலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வேளச்சேரி, ராம்நகர், மடிப்பாக்கம்,பள்ளிக்கரணை பகுதிகள் வெள்ளத்தில் மிதக்க முக்கிய காரணம், பள்ளிக்கரணை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு தான். சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பற்றி சிறிதும் யோசிக்காமல் நடந்த ஆக்கிரமிப்புகள் தான் காரணம். அதனை குறைந்தபட்சம் சரிசெய்யும் விதமாக, பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் ரேடியல் சாலையை அகற்றிவிட்டு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாலம் எங்கிருந்து தொடங்கும்

இந்து நாளிதழில் வந்துள்ள செய்திகளின் படி, துரைப்பாக்கத்தில் உள்ள 'சென்னை ஒன்' தகவல் தொழில்நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தையும் , பள்ளிக்கரணையில் உள்ள காமாட்சி மருத்துவமனை சந்திப்பையும் இணைக்கும் வகையில், 2 கி.மீ நீளமுள்ள ஆறு வழிப்பாதைப் பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ரேடியல் சாலையை அங்கு அகற்றுவதன் மூலம் வெள்ள நீர் தடையின்றி வெளியேற வழிவகுப்பதோடு, ராம் நகர், வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதி மக்கள் வெள்ளப் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறவும் இது உதவும் என்று சொல்கிறார்கள். சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு ஒரு சாலை அகற்றப்படுவது இதுவே முதல் முறை என்று அரசு வட்டாரங்கள் சொல்கின்றன.

Historic decision for Pallikaranai Flyover instead of road from Chennai One to Kamakshi Hospital

சாலையே இருக்காது

எதிர்காலத்தில், பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையின் ஒரு பகுதியான 'சென்னை ஒன்' முதல் காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வரையிலான 2 கி.மீ நீளமுள்ள சாலை இல்லாமல் போகும் நிலை உருவாகவும் போகிறது. தற்போது சாலை அமைந்துள்ள ஏழு ஹெக்டேர் நிலப்பரப்பை பள்ளிக்கரணை சதுப்புநிலம் மீண்டும் தன்வசப்படுத்திக்கொள்ளும், இதனால் வெள்ள நீர் எவ்விதத் தடையுமின்றி பாய்ந்து செல்ல முடியும் என்றும் நம்பப்படுகிறது.

உயர்மட்ட மேம்பாலம் எங்கே முடியும்

அதற்குப் பதிலாகவே 2 கி.மீ நீளமுள்ள பாலம் ஒன்று கட்டப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி கட்டத்தை எட்டயிருக்கிறது. துரைப்பாக்கம் பகுதியில் 'சென்னை ஒன்' நிறுவனத்திற்கு முன்பாகத் தொடங்கி, காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் உள்ள மேம்பாலத்திற்கு 100 மீட்டர் முன்பாக முடிவடையும் வகையில் ஆறு வழித்தடங்களைக் கொண்ட உயர்மட்டப் பாலம் ஒன்றை அமைப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

பாலம் எப்படி கட்டப்படும்

பாலத்தின் மேல் கட்டமைப்பைத் தாங்கும் தூண்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், 200 மீட்டர் இடைவெளி கொண்ட நீண்ட தாங்கு பகுதிகள் இதில் அமைக்கப்படும் என்றும் ஒவ்வொரு தூணும் 2.5 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கும் என்றும் கூறிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், இக்கட்டமைப்பிற்கான கட்டுமானச் செலவு மட்டும் சுமார் ₹450 கோடியாக இருக்கும் என்றார்கள். இத்திட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி ஏதுமில்லை.

Historic decision for Pallikaranai Flyover instead of road from Chennai One to Kamakshi Hospital

இரண்டு ஆண்டுகளில் மாறும்

எனவே மிக விரைவாக கட்டுமானப் பணிகளை முடித்து இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துவிட முடியும் என்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினார்கள்.. கட்டுமானத்தின் போது போக்குவரத்து மாற்றங்களைச் செய்வது மட்டுமே தேவைப்படும். ராஜீவ் காந்தி சாலையை வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை மற்றும் ஜிஎஸ்டி சாலை ஆகியவற்றுடன் இணைக்கும் இந்தச் சாலையில், தற்போது நாளொன்றுக்கு சுமார் 1.25 லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன.

15,000 கன அடி நீர் பாய வேண்டும்

இந்தச் சாலை அகற்றப்படுவதற்கு பின்னால் உள்ள முக்கியமான காரணம் என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் ராம் நகர், வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதி மக்களுக்குச் சற்று நிவாரணம் அளிக்கும். "ஒக்கியம் மடுவை நோக்கி மொத்தம் 15,000 கன அடி நீர் பாய்ந்து செல்ல வேண்டியுள்ளது. தற்போது, ​​2,100 மீட்டர் நீளமுள்ள இந்தச் சாலையில் வெறும் 90 மீட்டர் தூரத்தில் மட்டுமே நீர் வழித்தடக் குழாய்கள் (culverts) உள்ளன; இது வெள்ள நீர் தடையின்றிச் செல்லப் போதுமானதாக இல்லை. சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே உள்ள ஒரு சாலை அகற்றப்படுவது அநேகமாக இதுவே முதல் முறையாக இருக்கலாம்," என்கிறார்கள் அதிகாரிகள்.

அந்த காலத்தில் எப்படி அமைத்தார்கள்

ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளர் ஒருவர் இது குறித்து இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் , இந்தச் சாலை மற்றும் பல்லாவரம்-குன்றத்தூர் சாலை, ஓஎம்ஆர் , ஈசிஆர் -ன் சில பகுதிகள், சோழிங்கநல்லூர்-குடிமியான் தோப்பு சாலை, கோடம்பாக்கம்-ஸ்ரீபெரும்புதூர் சாலை மற்றும் சென்னை புறவழிச்சாலை ஆகியவை சிஎம்டிஏ வால் உருவாக்கப்பட்ட 'சென்னை பகுதி போக்குவரத்து ஆய்வுப் பிரிவு' மூலம் திட்டமிடப்பட்டவை என்று கூறினார். குறைந்தது 15 சாலைகள் அடையாளம் காணப்பட்டு வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லை

நிலம் கையகப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. 1998-1999 காலகட்டத்தில், இச்சாலைகளை அமைப்பதற்காகத் தனித் தலைமைப் பொறியாளர் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. 'ரேடியல் சாலை' ) கட்டுமானக் கழிவுகள் மற்றும் சில இடங்களில் குப்பைகளைக் கொட்டியும் அமைக்கப்பட்டது. சதுப்பு நிலப்பகுதி எவ்வாறு செயல்படும் என்பது குறித்து எங்களுக்குத் தெரியாததால், சில பகுதிகள் உள்வாங்கிக் கொண்டன; அவற்றை வலுப்படுத்த வேண்டியிருந்தது. அக்காலத்தில் சுற்றுச்சூழல் குறித்த புரிதல் எங்களுக்கு இருக்கவில்லை." என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+