எதிர்க்கட்சித் தலைவராகும் உதயநிதி? திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா ஸ்டாலின்?
சென்னை: தமிழகத்தின் 74 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழ்ந்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சியை பிடிக்கும் என்ற நிலை உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இந்தத் தேர்தலின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, திமுக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தோல்வியைத் தழுவியுள்ளார்.

ஒரு முதலமைச்சரே தேர்தலில் தோற்பது தமிழக அரசியலில் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தோல்வி திமுக தலைமைக்கும், தொண்டர்களுக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி?
திமுக கூட்டணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் நிலையில், சட்டசபையில் பலமான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
துணை முதலமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் உள்ள உதயநிதி, சட்டசபையில் விஜய்க்கு எதிராகக் குரல் கொடுக்க சரியான நபராக இருப்பார் என திமுக தலைமை கருதுகிறது.
ஸ்டாலின் மீண்டும் எம்.எல்.ஏ ஆக முடியுமா?
தோல்வியடைந்த மு.க. ஸ்டாலின் மீண்டும் சட்டசபைக்குள் நுழைய ஒரே ஒரு வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் பெரம்பூரில் அவர் வென்றுவிட்டார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் வெல்லும் நிலை உள்ளது. இதில் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்யும் பட்சத்தில் அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் அத்தியாயம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications