நள்ளிரவில் சென்னையில் ரவுடி ‘பலி ஆடு’ அஜய் வெட்டிப் படுகொலை.. மர்ம கும்பலை தேடும் போலீசார்!
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சரித்திர பதிவேடு ரவுடி பலி ஆடு என்கிற அஜய் (20) மர்ம நபர்களால் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜய் உடலை கைப்பற்றிய போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி பலி ஆடு (எ) அஜய். இவர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகர் பகுதியில் மர்ம கும்பல் ஒன்று அஜய்யை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் ரத்தம் கொட்ட அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அஜய் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த கொலைக்கு முன் விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இந்தக் கொலை நடந்துள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
