சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திட்டமிட்டபடி நாளை பேரணி நடக்கும்.. அதிமுகவுக்கு நன்றி செலுத்துகிறேன்.. ஸ்டாலின் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: திமுக பேரணிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் திட்டமிட்டப்படி திமுக பேரணி நாளை நடைபெறும் என கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திங்கள்கிழமை (நாளை) பிரமாண்ட பேரணி நடத்த உள்ளன.

holding rally in Chennai tomorrow against Citizenship Amendment Act : mk stalin

இந்த பேரணிக்கு தடை விதிக்க கோரி இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவர் வாராகி என்பவர் சென்னை உயர் தாக்கல் மனு தாக்கல் செய்திருந்தார். பொதுச்சொத்திற்கு சேதம், அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் பேரணிக்கு அனுமதி தராக்கூடாது என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜனநாயக நாட்டில் போராட்டம், ஆர்ப்பாட்டத்தை யாரும் தடுக்க முடியாது என்று தெரிவித்ததுடன்,காவல்துறையின் அனுமதியை மீறி பேரணி நடந்தால் அதை வீடியோவாக பதிவு செய்ய உத்தரவிட்டனர்.

ஜனாதிபதி கைகளால் பட்டத்தை வாங்க மாட்டோம்.. புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் முடிவால் பரபரப்புஜனாதிபதி கைகளால் பட்டத்தை வாங்க மாட்டோம்.. புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் முடிவால் பரபரப்பு

இந்த உத்தரவை வரவேற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிலரை பயன்படுத்தி அவர்கள் மூலம் திமுக பேரணியை தடுக்க அதிமுக திட்டமிட்டதாக குற்றம்சாட்டினார். அதிமுக அரசு திமுக பேரணிக்கு விளம்பரத்தை தேடி தந்துள்ளதாகவும் அதற்காக அதிமுகவிற்கு நன்றி செலுத்த விரும்புவதாகவும் கூறினார் .

பேரணிக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி என்று கூறிய ஸ்டாலின் நீதிமன்றத்தில் இருந்து எங்களுக்கு எந்த அழைப்பும் வராததால் நாங்கள் அதில் பங்கேற்கவில்லை என்றார்.

English summary
DMK leader mk stalin conforme, holding a rally in Chennai tomorrow against Citizenship Amendment Act
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X