சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் .. தவெக ஆட்சிக்கு பெரிய தலைவலி! உள்துறை செயலாளர் அதிரடி மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், இன்று உள்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் மாற்றப்பட்டிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் அரசு ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தன.

tamil nadu crime tvk

உள்துறை செயலாளர் என்ற முறையில் இந்த ஒட்டு மொத்த சட்டம் ஒழுங்கு விவகாரங்களை நேரடியாக கவனத்தில் கவனிக்கும் பொறுப்பில் இருந்தார் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் கே மணிவாசன்.

புதிதாக அமைந்துள்ள அரசு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை இன்னும் தீவிரமாக மேம்படுத்துவோம், மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிர்வாகத்தை வலுப்படுத்தும் என்று கூறியிருந்தது. ஆனால் நடைமுறையில் இது எதுவும் நடக்கவில்லை.

விஜய் அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் இன்னும் அதிகரித்தன. குறிப்பாக கோவையில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமும், அதை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதியில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் அத்துமீறல்களும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதேபோல மாநிலத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் புள்ளி விவரங்களுடன் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

மதுரையில் 17 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்டது மற்றும் சூலூர் சிறுமி கடத்தல் சம்பவம் போன்றவை தவெக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. சென்னையில் இரண்டு நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 9 கொலைகள் நடந்ததை சுட்டிக்காட்டி.. எதிர்கட்சியான திமுக இடைத்தேர்தல் பிரச்சாரங்களில் அரசை கடுமையாக விமர்சித்து வந்தது.

இதுபோக மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நியாயமான போராட்டங்களை காவல் துறையை கொண்டு அரசு ஒடுக்குவதாக இடதுசாரிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் குற்றம் சாட்டின. கடந்த ஆகஸ்ட் மாதம் இடதுசாரி மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகளின் போராட்டங்களில் மாணவர்கள் பங்கெடுப்பதை தடுக்கம் நோக்கில் கல்வி நிறுவனங்களுக்கு காவல்துறை சுற்றறிக்கை அனுப்பி வைத்திருந்தது. இதற்கு மிக கடுமையான அரசியல் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்த சுற்றறிக்கையை அரசு வாபஸ் பெற்றது.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக, கடந்த மாதம் சட்டம் ஒழுங்கு குறித்து அரசு வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு பெரும் புயலை கிளப்பி இருந்தது. அதாவது காவல்துறையின் சட்டம் ஒழுங்கு துறையை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கி அரசாணை வெளியிட்டது. இதன் மூலம் காவல் மரணங்கள், சாதி மற்றும் அரசியல் மோதல்கள் குறித்த விவரங்களை மக்கள் அறிய முடியாதபடி அரசு மறைக்க முயல்வதாக திமுக விமர்சித்திருந்தது. இப்படியான விமர்சனங்களை தொடந்து தான் தற்போது உள்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் மாற்றப்பட்டிருக்கிறார்.

ஐஏஎஸ் அதிகாரியான மணிவாசன், கடந்த 2026 சட்டமன்ற தேர்தலின் போது நடுநிலையான தேர்தல் பணிகளை உறுதி செய்வதற்காக.. தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர் தான். எனவே இவர் மாற்றப்பட வேண்டும் என்று தவெகவுக்கு ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. இந்த பின்னணியில்தான் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+