வினோத மனைவி..கோடாரியால் கணவனை வெட்டி சாய்த்ததை ரசித்து பார்த்து சிரித்தாராம் ஹனிமூன் பெண்! இப்படியா?
சென்னை: கணவனை ஹனிமூனுக்கு அழைத்து செல்லும்படி, அதிலும் மேகாலயாவுக்கு போக வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்து சென்றிருக்கிறார் சோனம்.. சிரபுஞ்சி உச்சியில் சென்றபோது, கூலிப்படையினரை வைத்து, கணவரை கொலை செய்துவிட்டார் சோனம். தற்போது குற்றவாளிகளிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கொலை குறித்து மேலும் சில பகீர் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
சோனத்தின் அப்பா தேவி சிங், இந்தூரில் பிளைவுட் கடை நடத்தி வருகிறார். அவருக்கு பக்கவாத பாதிப்பு உள்ளதால், மகன் விபின், மகள் சோனம் இருவரும்தான் கடையை கவனித்து வந்தனர்.

இதே கடையில் ராஜ் குஷ்வாகா என்ற இளைஞர் அக்கவுண்ட்டன்டாக வேலை பார்த்து வந்தார். இவரை சோனம் காதலித்து வந்தார்.. இவர் வேறு சாதி என்பதாலும், குடும்பத்தில் வசதியில்லை என்பதாலும், ராஜ் குஷ்வாகாவை தன்னுடைய வீட்டில் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்பது சோனத்துக்கும் தெரியும்.
நேபாளத்துக்கு தப்பி ஓட்டம்
இந்நிலையில்தான், சோனத்துக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர்.. வேறு வழியில்லாமல் அந்த மாப்பிள்ளையே அதாவது ராஜா ரகுவன்ஷியை கடந்த மாதம் 11ம் தேதி திருமணம் செய்தார். கணவரை கொன்றுவிட்டு, கடையில் வேலை பார்க்கும் காதலனுடன் நேபாளத்துக்கு தப்பித்துவிடலாம் என்பதே சோனம் போட்ட திட்டமாகும்.
இதற்காகவே ஹனிமூனுக்கு மேகாலயா போக வேண்டும் என்று கணவரிடம் தொந்தரவு செய்து அழைத்து சென்றுள்ளார்.. கூலிப்படைக்கு ரூ.14 லட்சம் பேசி முடித்தார்.. சில லட்சம் அட்வான்ஸ் தந்துள்ளார். ஆனால், கொலை செய்யும் நேரத்தில் கூலிப்படையினர் தயங்கியிருக்கிறார்கள்.. உடனே ரூ.20 லட்சம் தருவதாக சொல்லி அவர்களை சம்மதிக்க வைத்துள்ளார்..
சிசிடிவி காட்சி
சிரபுஞ்சி அருவிப்பகுதியில் சிசிடிவி இல்லாத இடமாக பார்த்து கணவரை அழைத்து சென்றிருக்கிறார்.. பின்னாடியே கூலிப்படையையும் வரவழைத்துள்ளார்.. இறுதியில் ராஜா ரகுவன்ஷியை சரமாரியாக கோடாரியால் வெட்டியிருக்கிறார்கள்.. இதனை சற்று தூரத்திலிருந்தே சோனம் ரசித்து பார்த்தாராம்..
இறுதியில் ரத்த வெள்ளத்தில் ராஜா சுருண்டு விழுந்து பலியாகிவிட்டார்.. பிறகு கணவனின் சட்டை பாக்கெட்டிலிருந்தே ரூ.15 ஆயிரத்தை சோனம் எடுத்து கூலிப்படைக்கு தந்தார்.. ஆனால், ராஜா அணிந்திருந்த நகைகளையும் கூலிப்படையினரே எடுத்து கொண்டார்களாம்.
காதலன் மீது கவனம்
இந்த கொலையில் தன்னுடைய காதலன் சிக்கி கொள்ள கூடாது என்பதிலும் சோனம் கவனமாக இருந்துள்ளார்.. மேகாலயா கிளம்பும்போதே காதலன் + கூலிப்படையினரை தன்னுடைய அதே ரயிலிலேயே அழைத்து கொண்டு கிளம்பியிருக்கிறார் சோனம்.. சிரபுஞ்சியில் காதலனை தவிர அனைவரும் சுற்றுலா பயணிகளை போல, கணவருக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள்.
காதலன் மட்டும் சுற்றுலா கைடு போல அறிமுகமாகி அவர்களுடனேயே தினமும் சுற்றுலா பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார்.. ஆனால் கொலை நடந்த நாளன்று மட்டும் காதலனை தன்னுடன் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் சோனம். கூலிப்படையை மட்டும் பின்னாடி வரசொல்லிவிட்டு, கணவனுடன் சென்றுள்ளார் சோனம். அங்குதான் கொலை அரங்கேறியிருக்கிறது.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications