ரஜினி வாய்ஸ் கொடுத்தாரே..சௌந்தர்யாவுக்கு சிக்கல்! சிறகொடிந்த ’கூ’..இப்போ ’ஹூட்’ அப்ளிகேஷனும் குளோஸ்!
சென்னை: 'கூ' செயலியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய ஹூட் ( hoote - huut) செயலி வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறாத நிலையில் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் அரட்டை செயலியும் இதே நிலையில் தான் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் கடிதப் போக்குவரத்து அதற்குப் பிறகு கம்பிவழி தொலைபேசி சேவை, செல்போன் சேவைக்கு பிறகாக தகவல் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்து விட்டது. குறிப்பாக ஆண்ட்ராய்டு வருகைக்குப் பிறகு பொதுமக்கள் இடையேயான செய்தி பரிமாற்றம் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது.

பேஸ்புக், மெசஞ்சர், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு செயல்கள் தற்போது தகவல் பரிமாற்றத்திற்கு பெரிய அளவில் உதவுகிறது. வாட்ஸ் ஆப் வந்ததற்கு பிறகு செய்தி பரமாற்றம் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது என்றே கூறலாம்.
அந்த அளவுக்கு லட்சஜ்கணக்கான மக்கள் தங்கள் தகவல்களை பரிமாறி வருகின்றனர். இதேபோல தங்கள் கருத்துக்களை குறிப்பிட்ட குழுவிற்குள்ளவோ அல்லது உலக அளவில் பகிர ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற அப்ளிகேஷன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் கொரோனா காலத்தில் வாடிக்கையாளர்களின் தனியுரிமை தொடர்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அப்ளிகேஷன்களுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
அப்போது மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா முழக்கம் அதிக அளவில் தொடங்கியது. இந்தியாவிலேயே பல செயலிகள் உருவாக்கப்பட்டன. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு செயலி தான் கூ. ட்விட்டர் செயலிக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட கடந்த 2020ஆம் ஆண்டு கூ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு கூ மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பல பெரிய இணையதள நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுடன் சேர்ந்து ஆய்வு செய்த போது, அதிக போட்டி மற்றும் பராமரிப்பு செலவு ஆகியவை அதிகமாக இருந்ததாலும், போதிய வரவேற்பின்மையாலும் கூ செயலியை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூ நிறுவனத்தின் நிறுவனர்கள் தெரிவித்திருந்தனர்.

2023-ம் நிதி ஆண்டில் பணியாளர்களின் செலவுக்கு கூட வருமானம் இல்லை என்பதால் அந்த செயலி நிரந்தரமாக மூடப்பட்டது. இந்த நிலையில் நிறுவனம் மட்டுமல்லாது சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஹூட் அப்ளிகேஷனும், ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு அறிமுகப்படுத்திய whatsappக்கு போட்டியாக கருதப்பட்ட அரட்டை ஆப்பும் தற்போது கைவிடப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2021ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது பார்ட்னரான சன்னி ஆகியோர் இணைந்து 'ஹூட்' என்ற குரல்வழி சமூக வலைதள அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தினர். இந்த அப்ளிகேஷன் 15 இந்திய மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பயனர்கள் 60 நொடிகளுக்கு தங்கள் கருத்துக்களை குரல் வழியாக வெளியிடலாம். முதன் முறையாக ரஜினிகாந்த் முதல் மெசேஜை கொடுத்திருந்தார். மேலும் ஏஆர் ரகுமான், ஆனந்த் மகேந்திரா, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், கௌதம் கம்பீர் உள்ளிட்ட பலரும் இதில் இணைந்திருந்தனர்.
அதற்குப் பிறகு அதிக அளவிலான ஆக்டிவ் பயனர்களை இந்த அப்ளிகேஷன் ஈர்க்க தவறியது. தற்போதைய நிலவரப்படி இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் வெறும் ஒரு லட்சம் டவுன்லோடுகளை மட்டுமே கொண்டு இருக்கிறது. காரணமாக இந்த அப்ளிகேஷன் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே சமயத்தில் ஹூட் அப்ளிகேஷனில் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.ஆனால் புதிய ஆக் ஆன் மற்றும் ஏற்கவும் ஏற்கனவே உள்ள யூஸர்கள் லாகின் செய்யவும் முடியவில்லை. இதனால் இந்த அப்ளிகேஷன் தனது செயல் பாட்டை நிறுத்திக் கொண்டதாகவே கூறப்படுகிறது.
கூ, ஹூட், அரட்டை ஆகிய 3 இந்திய செயலிகளும் கொரோனா ஊரடங்குக்கு மத்தியில், Facebook, Twitter போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட போது தொடங்கப்பட்டவை. ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த செயலிகளுக்கு மாற்றாக எந்த புதுமையான யோசனைகள், உக்திகள் இல்லாமல் அறிமுகமானதால் தான், இந்த 3 செயலிகளும் குறுகிய காலத்திலேயே தங்களின் பயனர்களின் ஆர்வத்தை இழந்ததாக விமர்சிக்கப்படுகிறது.
-
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications