அவங்களுக்கு தனி.. எங்களுக்கு தனி.. பிரிச்சு கொடுங்க.. நிவாரணத்திலுமா ஜாதி.. அதிர வைக்கும் வீடியோ
நிவாரண உதவியிலும் சாதி பார்க்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: நம்ம ஆளுங்கள்ல சில பேருக்கு இன்னும் எவ்வளவோ அவஸ்தை பட்டா புத்தி வரம்னு தெரியாது!
கஜா புயல் வந்து அவங்கங்க அல்லாடி கிடக்கிறாங்க. புயல் போய் ஒரு வாரம் ஆகியும் யாராலும் தலைதூக்க முடியல! எதிர்காலமே இருண்டுட்டு கிடக்கு!!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கையேந்தும் நிலைமைக்கு வந்துவிட்டார்கள். தமிழகத்தின் நாலாபுறமும் உள்ள மக்கள் ஒன்றுதிரண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய புறப்பட்டு கொண்டிருக்கிறார்கள். யார் யாரெல்லாம் என்ன தர முடியுமோ அதை மனசார தந்து உதவி கொண்டிருக்கிறார்கள்.
ஜாதி வெறி
வீடு, வாசல், தோட்டம், துறவு, நிலபுலன், வாழ்வாதாரம் எல்லாத்தையும் இழந்து நடுரோட்டில் நின்ற நிலைமைக்கு ஆளாகியும் இன்னும்கூட ஒருசிலரிடம் ஜாதி வெறி போகலை என்றால் இவர்களை எல்லாம் என்ன செய்வது?

நிவாரண பொருட்கள்
ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் யாரோ நல்லுள்ளம் படைத்தவர்கள் அரிசி, பருப்பு என்று கொண்டு வந்து நிவாரண பொருட்களை தர வந்திருக்கிறார்கள். அந்த பொருட்களை வாங்க மக்கள் கூடி நிற்கிறார்கள்.

பிரிச்சி கொடுங்க
நிவாரண பொருட்களை பிரித்து தருபவரிடம், எங்கள் சாதிக்கு தனியாக கொடுத்து விடுங்கள், நாங்கள் தனியாக இந்த கட்டிடத்தில் தங்கி இருக்கிறோம், அந்த சாதிக்காரங்க வேற கட்டிடத்தில் தனியாக இருக்கிறார்கள்... எங்களுக்கு இப்படியே பிரிச்சி கொடுத்திடுங்க" என்று கேட்கிறார்கள்.

இப்படியா இருப்பீங்க?
இதற்கு உதவி செய்ய வந்தவர்கள், "கவர்ன்மெண்ட் பண்ண முடியாததை நாங்க பண்ணலாம்னு வந்திருக்கோம். இந்த நேரத்திலும் இப்படியா சாதி பாக்கிறீங்க? ஜாதிக்கொரு கட்டிடத்திலயா தங்கி இருக்கீங்க? இந்த நேரத்துலயாவது எல்லாரும் ஒத்துமையா இருங்க.

செத்தே போயிடலாம்
முதல்ல உயிரை காப்பாத்திக்கிற வழியை பாருங்க " என்று சொல்கிறார். உதவி செய்ய வந்தவர் இன்னொருவர், "இந்த நேரத்துலயும் ஜாதி பார்க்கறதா இருந்தா அதுக்கு செத்தே போயிடலாம்" என்று நறுக்கென்று சொல்கிறார். இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications