இடைத்தேர்தல் விரைவாக நடத்த ஆர்வமாக இருக்கோம்.. செங்கோட்டையன் vs எடப்பாடி பழனிசாமி.. நடந்தது என்ன?
சென்னை: குதிரை பேர விவகாரம் தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மைக் அணைக்கப்பட்ட போது, என்னங்க.. உங்க கட்சி எம்எல்ஏ-க்களை வாங்க முடியாதா என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டசபையில் இன்று தொழில் துறை மற்றும் கனிம வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்திற்கு இடையில் பொறுப்பு அமைச்சர் தொடர்பான விவாதம் வந்தது. அப்போது செங்கோட்டையன் பேசுகையில், 6 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள். அந்த தொகுதிகளின் குறைகளை அமைச்சர்கள் ஒருநாள் ஒதுக்கி கேட்டறிந்து வருகிறோம் என்றார்.

அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி, ஒருநாளில் எல்லாம் ஒரு தொகுதியின் கோரிக்கையை கேட்டுவிட முடியாது. அதனால் எம்எல்ஏ இருக்க வேண்டும். பொறுப்பு அமைச்சர் ஒருநாள் தான் செல்வார் என்றார். அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளோம். அதில் நாங்கள் வெற்றி பெறுவோம்.. அத்தனை பேரும் வெற்றி பெறுவார்கள் என்றார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, விவாதம் வேறு மாதிரி போகுது.. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. வெற்றி பெற்ற பின் அந்த எம்எல்ஏ தங்களை சந்தித்து ஒரு மனு கொடுக்கிறார். இதன்பின் சட்டசபை நிகழ்ச்சியில் ஒருநாள் பங்கேற்றுவிட்டு பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ, மேல்மாடியில் உள்ள ஒரு கட்சியில் சேர்கிறார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், உணர்ச்சிவசப்படாம உங்கள் கருத்தை நிதானமாக சொல்லுங்கள்.. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதுதொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தில் உள்ளது என்றார். தொடர்ந்து செங்கோட்டையன் எழுந்து, குதிரை பேரம் என்றெல்லாம் பேசினார்கள். நீங்க நாட்டுக்காக பெரிய கஷ்டப்பட்டது தெரியாது பாருங்க என்று கமெண்ட் அடித்தார்.
தொடர்ந்து, எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண் மனுவை வாபஸ் பெற்றார். அது குதிரை பேரம் இல்லையா என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரி தான் வேட்புமனுவை தள்ளுபடி செய்தார். அந்த நேரத்தில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு இடையில் தான் பிரச்சனை நிலவி வந்தது. அதனை வந்து இங்கு இணைக்கக் கூடாது.
இருக்கும் கருத்தை பேச வேண்டும்.. எங்களோடு இருந்த எம்எல்ஏ-க்கள், ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக வேறு கட்சியில் இணைகிறார்கள் என்றார். இதன்பின் எடப்பாடி பழனிசாமி மைக் அணைக்கப்பட்ட சூழலில், அவர் கொந்தளிக்க தொடங்கினார். உங்கள் கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முடியாதா, என்னங்க என்று சவுண்ட் கொடுத்தார். இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications
