ஓசூர் மக்களுக்கு குட் நியூஸ்.. மெட்ரோ திட்டம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்.. இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை விரைவான போக்குவரத்து அமைப்பு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள், மாவட்டங்கள் பல உள்ளன. உதாரணமாக கோவை, திருச்சி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகியவை தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்கள் ஆகும். அதிலும் ஓசூர் நகரம் பெங்களூருக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருகிறது. பெங்களூருக்கு செல்ல வேண்டிய பல்வேறு முதலீடுகள் ஓசூரை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

Hosur to pommachandra MRTS Rapid transit system feasibility study agreement sign

இதனால் ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டங்களும் உள்ளன. பெங்களூரில் இருந்து குறிப்பிட்ட சுற்றுவட்டார வரை விமான நிலையம் அமைக்க கூடாது என்ற விதி உள்ளதால் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் சிக்கல் உள்ளது. இப்படிபட்ட நிலையில்தான் ஓசூரில் மெட்ரோ கொண்டு வரப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணி தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தான் சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிப்பதற்காக ரூ.29.44 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை விரைவான போக்குவரத்து அமைப்பை (MRTS) அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தம் பாலாஜி ரெயில் ரோட் சிஸ்டம்ஸ் மற்றும் ஹபோக் கன்சல்டன்ட்ஸ் ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு ரூ.29.44 லட்சம் மதிப்பில் கையெழுத்தானது.

அத்திபள்ளி வழியாக ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை மொத்தம் தோராயமாக 20 கி.மீ நீளத்திற்கு, தமிழ்நாட்டில் 8 கி.மீ மற்றும் கர்நாடகாவில் 12 கி.மீ. என இருமாநிலங்களுக்கு இடையே விரைவான போக்குவரத்து அமைப்பாக இருக்கும்.

பல்வேறு போக்குவரத்து நெரிசல் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வது, தற்போதுள்ள பயண தேவை மாதிரியை புதுப்பித்தல், 30 ஆண்டு காலத்திற்கான பயணத் தேவையை 5 ஆண்டு இடைவெளியில் கணித்தல் மற்றும் முன்மொழியப்பட்ட வழித்தடத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுதல் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+