வெயில் காலத்தில் வேகமாக சுத்தாம சீலிங் ஃபேனும் சோதிக்குதா? சின்ன டிப்ஸ்.. நீங்களே சரி செய்து விடலாம்
சென்னை: குளிர் காலத்தில் அதிவேகமாகவும் வெயில் காலத்தில் மெதுவாகவும் சுற்றி பாடாய் படுத்துதே என சீலிங் ஃபேன்கள் குறித்து இணையத்தில் பரவும் மீம்ஸ்களை பார்த்து ரசித்து இருப்போம். அது உண்மைதானா என்னவோ என்று சொல்லும் அளவிற்கு வெயில் நேரத்தில் சீலிங் ஃபேன்கள் சிலருக்கு சோதனையை கொடுத்து இருக்கலாம். ஃபேன்கள் இப்படி மெதுவாக சுற்றினால் எப்படி சரி செய்வது என்பது குறித்து இங்கே சில டிப்ஸ் கொடுத்து இருக்கிறோம்.
இந்த ஆண்டு கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே வெப்பம் தகிக்கத் தொடங்கிவிட்டது. சொல்லப்போனால் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் இதே நிலைதான் உள்ளது. இதற்கு தமிழ்நாடும் விதி விலக்கல்ல. ஏப்ரல் மாதம் தொடங்கிய பிறகு எல்லாம் பகல் வேளைகளில் வெளியில் போக வேண்டும் என்றாலே வேப்பங்காய் போல கசக்கிறது என சொல்லும் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது.

ஃபேன் மெதுவாக சுற்றுகிறதா?
வெளியில் நாலு எட்டு நடந்து விட்டு வந்தாலே.. உடல் முழுக்க வியர்வை கொட்டி குளித்தது போல் ஆகிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு அனல் அதிகரித்துள்ளது. வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியதும் பலரும் ஓடிப்போய் மின் விசிறி பக்கம் போய் நின்று விடுவதை காண முடியும். சற்று வசதி படைத்தவர்கள் ஏசி போன்றவற்றை பயன்படுத்தினாலும் கூட நடுத்தர மற்றும் ஏழை மக்களை வெப்பத்தில் இருந்து சற்று காப்பது இந்த மின் விசிறிகள் என்றால் மிகையல்ல. வீட்டை விட்டு கடை வீதிக்கு சென்று வந்தால் கூட ஒரு ஐந்து நிமிடமாவது காற்றாடிக்கு கீழே நின்றால் தான் அந்த சோர்வு நீங்கும். சென்னை போன்ற நரங்களில் எல்லாம் வீடுகளுக்குள் பகலில் மட்டும் இல்லை.. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் வீடுகள் மாடியில் இருந்து விட்டால் நிலைமை அதோ கதிதான்... ஃபேன் போட்டால் கூட வியர்வை கொட்டிக்கொண்டேதான் இருக்கும் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கிறது. இதனால், வடிவேலு ஒரு காமெடி காட்சியில் சொல்வாரே... " மாலா ஃபேனை 12-ம் நம்பரில் வையடி" என்று அதுபோலத்தான் ரெகுலேட்டரில் புல் ஸ்பீடு வைத்தும் காற்று சரியாக வரவில்லையே என்றுதான் எண்ண தோன்றும். அதுவும் சில நேரங்களில் ஃபேன்களை பொறுத்தவரை 4-ல் வைத்தாலும் முதல் பாயிண்டில் வைத்ததுவே போல சுழல்வதை காண முடியும். மின்சாரம் தான் சரிவர இல்லையோ என்று அதையும் செக் செய்து பார்த்து இருப்பார்கள். ஆனால், மின்சாரத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது.
எளிய முறையில் சரி செய்யலாம்
அப்படி இருந்தும் ஃபேன் மெதுவாகத்தான் ஓடுகிறது என்றால் அதற்கு தீர்வு ஃபேனில் தான் உள்ளது. மிகவும் எளிய முறையில் சில நிமிடங்களில் இதை சரி செய்து கொள்ள முடியும்.. அது எப்படி இன்று இங்கே பார்ப்போம். பொதுவாக ஃபேன்களின் இறக்கைகளில் தூசுகள் அதிகம் படிந்து இருந்தால் வேகமாக சுற்றுவது போன்று தோன்றினாலும் காற்று கீழே வராது. இதனால், இறக்கைகளில் தூசுகள் இருந்தால் அதை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்வதற்கு உலர்ந்த துணியை பயன்படுத்த வேண்டும். ஃபேன் வேகமாக சுற்றுவது இல்லை என்றால், அதற்கு கண்டென்ஸர் (condenser) போயிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கண்டென்ஸ்ரை மாற்றினால் ஃபேன் ஃபுல் ஸ்பீடில் சுற்றும். இந்த கண்டென்சரின் விலை மொத்தமே ரூபாய் 100-க்குள் அடங்கிவிடும். அதனால் விலையைப் பற்றி பெரிதும் கவலைப்பட வேண்டியது இல்லை. கண்டென்சரை மாற்றக் கூட எல்க்ட்ரிஷயனை தேடி அலைய வேண்டாம். நாமே எளிதில் மாட்டிவிட முடியும். ஃபேனின் மோட்டாருக்கு மேலே சிறிய டப்பா போல இருக்கும். அதில் இணைக்கப்பட்டு இருக்கும் வயரை கழற்றி புதிய கண்டென்சரை வாங்கி அதில் மாட்டி விட்டால் போதும்.. இப்போது உங்கள் ஃபேனின் வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications