வாடகை வீட்டில் இருக்கீங்களா? மாற்றப்பட்ட விதிமுறை.. ஜனவரி 1 முதல்.. அமலுக்கு வருகிறது புதிய ரூல்!
சென்னை: ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுக்க புதிய வாடகை வீடு சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. வீட்டு வாடகைச் சட்டங்களில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் வீடு ஓனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாம். இந்த மாற்றங்கள் டிசம்பரில் சட்டமாக கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து 2026 ஜனவரி 1ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் சூழல் உள்ளது. வாடகைதாரர்களை வெளியேற்றும் அளவிற்கு வாடகை சட்டங்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்து உள்ளது என்று உங்களுக்கு கேள்வி எழலாம். வாடகை சட்டத்தில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

வீட்டு வாடகை சட்டம் மாற்றம்
வீட்டு வாடகை சட்டங்களில் சமீபத்தில் மத்திய அரசு விரிவான மாற்றங்களைச் செய்துள்ளது. இது முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதையும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. வீடு வாடகைக்கு விடும் முறை, அதன் விதிமுறைகள், இதற்காக வழங்கப்படும் கட்டுப்பாடுகள் என்று பல விஷயங்களை மாற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது அனைவருக்கும் நன்மை பயக்கும். வாடகைதாரர், வீட்டு உரிமையாளர் இருவருக்கும் பாதுகாப்பைக் கொண்டுவரும்.
அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் இனி எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். உள்ளூர் வாடகை ஆணையத்தில் 60 நாட்களுக்குள் பதிவு செய்வது அவசியம். இது ஒப்பந்தங்களின் சட்டபூர்வ தன்மையை உறுதி செய்யும். நிபந்தனைகள் குறித்த தேவையற்ற சர்ச்சைகள் குறையும்.
வீட்டு வாடகை சட்டங்கள்: கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் என்னென்ன?
வருடாந்திர வாடகை அதிகரிப்பு 5 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தால் அதன்படி இருக்கலாம். வீட்டு உரிமையாளர் வாடகையை உயர்த்த மூன்று மாதங்களுக்குமுன் அறிவிப்பு தர வேண்டும். வாடகைதாரர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத நிதிச் சுமை இதனால் குறையும். வாடகை விலைகளில் கணிசமான ஸ்திரத்தன்மை ஏற்படும்.
பாதுகாப்பு வைப்புத்தொகைக்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக இரண்டு மாத வாடகையாக மட்டுமே இருக்கும். உதாரணமாக, மாத வாடகை ₹20,000 ஆக இருந்தால், ₹40,000 மட்டுமே வைப்புத்தொகை. இதனால் வாடகைதாரரின் ஆரம்பகால நிதிச் சுமை குறையும். ஒப்பந்தம் முடிந்ததும் வைப்புத்தொகை உரிய நேரத்தில் திருப்பித் தரப்படும்.
வீட்டு வாடகைச் சட்டங்கள்: உரிமை மற்றும் பொறுப்புகள்
வீடு காலி செய்யும் நடைமுறைகள் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள் சட்டபூர்வ காரணங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். தேவைப்பட்டால், நீதிமன்ற அணுகுமுறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது வாடகைதாரர்களை பாதுகாக்கும். நியாயமற்ற வெளியேற்றம் இதன்மூலம் தடுக்கப்படும். சர்ச்சைகள் நீதிமன்றம் மூலம் நியாயமாக தீர்க்கப்படும்.
வாடகை விலை சொத்தின் ஆண்டு மதிப்பிற்கு ஏற்றதாக நிர்ணயிக்கப்படும். பொதுவாக 8-10 சதவீதமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ₹50 லட்சம் மதிப்புள்ள நிலத்திற்கு ₹40,000 முதல் ₹50,000 வாடகை சாத்தியம். அதிக வாடகை குறித்து வாடகைதாரர்கள் முறையாக முறையிடலாம். வாடகை ஆணையம் அல்லது நீதிமன்றத்தில் புகார் செய்யலாம்.
வீட்டு வாடகை சட்டங்கள்: வரி விதிப்பு மாற்றம்
ஏப்ரல் 2025 முதல் வரி விதிப்பு விதிகள் மாறும். வாடகை வருமானம் வீட்டுச் சொத்து வருமானமாகவே கருதப்படும். வருமான வரிச்சட்டம் பிரிவு 28-இன் கீழ் இது வகைப்படுத்தப்படும். டிடிஎஸ் விலக்கு வரம்பு ₹2.4 லட்சத்திலிருந்து ₹6 லட்சமாக கணிசமாக உயரும். உரிமையாளர்களுக்கு அதிக பணப்புழக்கம் கிடைக்கும். வரி நடைமுறைகள் மேலும் எளிதாகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications