இந்த 5 டாக்குமெண்ட் இருக்கா.. அப்போ மகளிர் உரிமை தொகை வீடு தேடி வரும்? தமிழக அரசின் செம மூவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிது என்றும், வெறும் ஐந்து ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்குப் பத்து நிமிடங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Tamil Nadu Government Notification magalir urimai thogai

உங்களுடன் ஸ்டாலின் - மகளிர் உரிமை தொகை

இந்த முகாம்களில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண், வங்கி கணக்கு பாஸ்புக் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானவை. வேறு எந்த கூடுதல் ஆவணங்களும் கேட்கப்படுவதில்லை. மகளிர் உரிமைத் தொகைக்குத் தகுதி இருந்தும் பெறாதவர்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மகளிர் உரிமை தொகை விண்ணப்பம்

இத்திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த உறுதிமொழியை அளித்தார். சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு வார்டிலும் அக்டோபர் மாதம் வரை இரண்டு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 109 முகாம்கள் செயல்படும். இம்முகாம்கள் மூலம் அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்றும், உரிமைத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் இம்முகாம்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். முகாமிற்கு வந்த சில பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். "நாங்கள் இங்கு வந்தவுடன், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தை அவர்களே கொடுத்து, எங்களுக்காக அதை நிரப்புகிறார்கள். மேலும், எங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிப்பதால், வேலைகள் சுலபமாக முடிந்துவிடுகின்றன," என்று அவர்கள் கூறினர்.

பணம் கிடைக்கும் ரூ.1000

அவர்கள் மேலும் கூறியதாவது: "ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை மட்டும் கொண்டு வந்தால் போதும். இந்த முகாமில் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அதுமட்டுமின்றி, உங்களிடம் வங்கி கணக்கு இல்லையென்றால், இங்கேயே வங்கி கணக்கு தொடங்கி, அடுத்த நிமிடமே மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கலாம்."

மற்றொரு பெண் கூறுகையில், "எல்லா ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன. ஆனால், ரேஷன் கார்டில் பிரச்சினை இருந்தால், அதையும் இங்கேயே மாற்றி, அதன் பிறகு உடனடியாக அந்த ரேஷன் கார்டை வைத்து மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். எல்லாமே ஒரே இடத்தில் முடிக்கும் வகையில் தரமான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+