உங்க வீட்டுல குழந்தைங்க இருக்காங்களா? வீடு வீடாக போன அரசு கார்! பள்ளிகளுக்கு அன்பில் போட்ட உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் இடைநின்ற மாணவர்களை வீடுதேடி சென்று காரில் அழைத்து வந்த ஆட்சியர் ஒருவர் கவனம் பெற்றுள்ளார். இவரின் மூலம் ஒரே நாளில் 328 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின்படி புதிய கல்வி ஆண்டில் வகுப்புகளுக்கு வராத மாணவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு அதை பற்றி ஆலோசனை செய்யப்படும். அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவது பற்றி ஆலோசனை செய்யப்படும்.

மாற்றுத் திறன் குழந்தைகள் இருந்து, அவர்கள் வகுப்புகளுக்கு சேராமல் இருந்தால் அவர்களை மீண்டும் வகுப்புகளுக்கு சேர்த்துக்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்படும். இது போன்ற சிறப்பு தேவை கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்வது தொடர்பாகவும் இதில் ஆலோசனை செய்யப்படும்.
அதேபோல் இல்லம் தேடி கல்வி திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். அதன்படியே இந்த வருடமும் ஆலோசனைகள் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு வராத மாணவர்களின் லிஸ்ட் எடுக்கப்பட்டது. அவர்களிடம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆலோசனைகள் கூட செய்யப்பட்டது.
தீவிரமாக முயலும் அரசு: தமிழ்நாட்டில் பள்ளி இடை நிற்றலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டதே அதற்குத்தான். அதன்பின் பஸ்பாஸ் திட்டம், இலவச சைக்கிள், இலவச லேப்டாப் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது இடைநிற்றலை தவிர்க்கவே.
முக்கியமாக பெண் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் திட்டமும் மாணவியர்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவேத்தான்.
ஆனால் இப்படி பல திட்டங்கள் இருந்தும் மாணவ, மாணவியர் பலர் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே முடங்குகிறார்கள். வறுமை, குடும்ப சூழ்நிலை, ஆர்வமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவ, மாணவியர் பலர் பள்ளி, கல்லூரி செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்படுகிறது. தேசிய அளவில் உயர் கல்வியில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உயர் கல்வி சதவிகிதம் 52 ஆக உள்ளது. இதுதான் தேசிய அளவில் அதிகம். இதற்கு பள்ளி படிப்பை முடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அதிரடி நடவடிக்கை: இந்த மாணவர்களை பள்ளியில் சேர்க்க ஏற்கனவே அன்பில் மகேஷ் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இடைநின்ற மாணவர்களை வீடுதேடி சென்று காரில் அழைத்து வந்த ஆட்சியர் ஒருவர் கவனம் பெற்றுள்ளார். இவரின் மூலம் ஒரே நாளில் 328 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடை நின்ற மாணவர்கள் லிஸ்டை அவர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எடுத்துள்ளார். அவர்களின் விலாசங்களை எடுத்து நேரடியாக அவர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளார்.
மாணவர்களின் பெற்றோர்களிடம் அவர்கள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பதை விசாரித்து, அவர்களின் குறைகளை களைந்து, தேவைகளை பூர்த்தி செய்வதாக உறுதி அளித்து.. மாணவர்களை அரசு காரில் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டுள்ளார். அவரின் இந்த செயல் அப்பகுதி மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications