சென்னை மெட்ரோ ஆட்டோவில் வெறும் 25 ரூபாயில் வீட்டுக்கு போகலாம்.. அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த 10 கிமீ சுற்றளவில் பயணம் செய்ய மின்சார ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 25 ரூபாய் தான் கட்டணம் ஆகும்.இதேபோல் மினி பஸ் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை விம்கோ நகர் -விமான நிலையம், பரங்கி மலை- கோயம்பேடு-திருமங்கலம்- சென்ட்ரல் என இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. அதாவது சென்னையில் புறநகர் ரயில் இல்லாத வழித்தடங்களை இணைத்து மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறத. சென்னை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் மெட்ரோ ரயிலில் பயணிப்பதை அதிகம் விரும்புகிறார்கள். இதையடுத்து, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதையடுத்து மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3-வது வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4-வது வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5-வது வழித்தடமும் அமைக்கப்பட்டு வருகிறது.சென்னையில் வரும் 2026 முதல் 2028ம் ஆண்டுகள் கிட்டத்தட்ட மெட்ரோ பணிகள் அனைத்தும் முடிந்து மெட்ரோ ரயில்கள், சென்னையில் முழுமையாக ஓடப்போகிறது.

How about an electric auto in Chennai Metro? Travel for just rs.25 per KM

இந்நிலையில் சென்னை மெட்ரோ படிப்படியாக மெட்ரோ ரயில் நிலையங்களில் வசதிகளை அதிகப்படுத்தி வருகிறது. சென்னை மெட்ரோ ரயிலில் தினசரி பயணிப்போர் பாஸ் எடுத்து பயணிக்கலாம். அப்படி பயணித்தால் டிக்கெட்டில் சலுகை வழங்கப்படுகிறது. இதேபோல் பார்க்கிங் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த 10 கிமீ சுற்றளவில் பயணம் செய்ய மின்சார ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 20 ரூபாய் தான் கட்டணம் ஆகும். சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

மெட்ரோ இரயில் பயணிகள் தங்களது இருப்பிடத்திலிருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதற்கும் மெட்ரோ ரயிலைத்திலிருந்து அவர்கள் பணி செய்யும் இடத்திற்கு செல்வதற்கும் பல்வேறு இணைப்பு சேவைகளை ஏற்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

இந்த இணைப்பு சேவை வசதிகளில் தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் இணைப்பு சிற்றுந்து சேவை (Rome S70K) மற்றும் எம்.ஆட்டோ ப்ரைடு ((LEGGO) மின்னியங்கி மூன்றுசக்கர வாகன இணைப்பு சேவை திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்காக- இயக்கப்படுகிறது. இந்த இணைப்பு சேவை வசதிகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) இன்று 30.06.2023 திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் தொடக்கி வைத்தார்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மெட்ரோ கனெக்ட் சேவைகள் (Metro Connect Sersen, மெட்ரோ பயணிகளின் ஓட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் தினசரி போக்குவரத்துத் தேவைகளுக்காக மெட்ரோ இரயில் சேலையைப் பயன்படுத்துவதற்கு அதிகமான மக்களை ஊக்குவிப்பதற்காகவும் இயக்கப்படுகிறது. இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மெட்ரோ- பயணிகள் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள தங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு வசதியாக பயணிக்க முடியும்

ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 என்ற கட்டணத்தில் 10 மின்னியங்கி மூன்றுசக்கர வாகன இணைப்பு சேவையானது திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகளின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது.

மாநகர போக்குவரத்துக் கழகத்தின் இணைப்பு சிற்றுந்து சேவை rute s70k திருமங்கலம் மற்றும் கொாட்டூர் வாட்டர் கேனல் சாலைக்கு இடையே இயக்கப்படும். அண்ணா நகர் மேற்கு பணி மனை, பாடி சரவணா ஸ்டோர் பக்தவச்சலம் மெமோரியல் மகளிர் கல்லூரி, கொரட்டூர் பேருந்து நிலையம், கொரட்டூர் ரயில் நிலையம் ஆகிய இடங்களை உள்ளடக்கியது.

இந்த துல்லியமாகத் திட்டமிடப்பட்ட இந்த பாதை, அப்பகுதியில் வசிப்பவர்களின் பயணத்தேவைகளை பூர்த்தி செய்யும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+