3 வருட திமுக ஆட்சி எப்படி? ஸ்டாலினுக்குப் போட்டி யார்? ரவீந்திரன் துரைசாமி ஓபன் டாக்!
சென்னை: ஸ்டாலினுடன் போட்டிப் போடக் கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் தலைவர்களே இல்லை என்று ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.
நிதி நெருக்கடி, மத்திய அரசு தரும் மறைமுகமான நெருக்கடி, மோடி எதிர்ப்பால் அமைச்சர்களுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து 3 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்துள்ளது திமுக அரசு.

இன்னும் அழுத்தமாகச் சொன்னால், ஆளும் கட்சிக்கு மிகப் பெரிய சவால் விடக்கூடிய அளவுக்கு வலிமையான எதிர்க்கட்சி தலைவரே தமிழ்நாட்டில் இல்லை.
எடப்பாடி பழனிசாமி அந்த ரோலை எப்போது தவறவிட்டுவிட்டார். மரம் தானாகக் காய்ந்தால் பழம் சாப்பிடலாம் என அவர் பாதுகாப்பான இடத்திற்குள் போய் செட்டில் ஆகிவிட்டார்.
அந்த இடத்தை எப்படியாவது தட்டிப் பறித்திட முடியாதா என முட்டி மோதிக் கொண்டிருந்தார் அண்ணாமலை. அவருக்கு 60 ஆண்டுகால அரசியல்வாதியான ஸ்டாலினை டீல் செய்வதற்கான முதிர்ச்சி இல்லை.எனவே அவர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என ஆகிவிட்டது.
இந்தநிலையில் திமுக 'தனி ஒருவன்' பாணியில் போட்டி தலைவர்களே இல்லாத அளவுக்கு அரசியல் களத்தை க்ளீன் ஆக வைத்துள்ளது. திமுகவுக்கு இப்படி ஒரு நல்ல காலம் கலைஞர் இருந்தபோதே கிடைக்கவில்லை. அப்படி ஒரு சிறப்பான சூழல் திமுகவுக்கு அமைந்துள்ளது.
இந்த மக்களைவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு துணை முதல்வர் நாற்காலியில் உதயநிதி அமரவைக்கப்படுவது உறுதி என்று தகவல்கள் கசிந்து வருகின்றன. அவர் இந்த முறை 8 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து கட்சிக்காகப் பிரச்சாரம் செய்துள்ளார்.
ஆகவே, திமுக இளைஞரணி மாநாட்டின் போது மறந்துபோன துணை முதல்வர் பதவி இப்போது முதல்வர் ஸ்டாலின் நினைவில் மீண்டும் எழுந்துள்ளது என்கிறார்கள்.
இந்நிலையில் திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சி பற்றிய தனது கருத்துகளை முன்வைத்துள்ளார் ரவீந்திரன் துரைசாமி.
அவரது பார்வையில் திமுக ஆட்சி எப்படி உள்ளது? அவரே சொல்கிறார் படியுங்கள்.
"இந்த ஆட்சி எப்படி உள்ளது என்பதை 5 ஆண்டுகள் கழித்து முடிவு செய்யப் போகின்றவர்கள் மக்கள்தான். அவர்கள் இந்த ஆட்சி சிறந்ததாக இருந்தால், அவர்களில் திட்டங்கள், செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள்.
எனது மனநிலையில் இந்த 3 ஆண்டுகால ஆட்சி பற்றி என்ன சொல்லப் போகிறேன் என்பது முக்கியமே இல்லை. விருப்பு வெறுப்புக்கு ஏற்ற மாதிரியான கருத்தை நான் சொல்லிக் கொள்ளலாம். அது விசயமே இல்லை. தேர்தல் நேரத்தில் மக்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதுதான் விசயமே.
பொங்கல் இலவசம் கொடுத்த போது வெல்லக்கட்டி உருகிப்போகிறது என்று கடும் விமர்சனம் எழுந்தது. அப்போதுகூட மக்கள் இதை எல்லாம் தேர்தல் காலத்தில் வெளிப்படுத்த மாட்டார்கள். இது ஒரு சாதாரண அதிருப்திதான் என்றேன். உள்ளாட்சித் தேர்தலில் இந்த மாதிரியான விசயங்கள் எல்லாம் எடுபடாமலே போய்விட்டது.

அடுத்து ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல். அதில் மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள் என்றார்கள். நான் அப்போதும் சொன்னேன். இதில் ஒன்றுமே பிரதிபலிக்காது. காரணம், செந்தில் பாலாஜி திறமையான ஒருங்கிணைப்பாளர். அவர் திமுகவுக்கு அமோக வெற்றியை உண்டாக்கிக் கொடுத்துவிடுவார் என்றேன். அதுதான் நடந்தது.
சொல்லப் போனால், தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் என யாருமே தமிழ்நாட்டில் இல்லை. அவர் பலமான தலைவராக இருக்கிறார். எடப்பாடியோ, அண்ணாமலையோ, சீமானோ, அன்புமணியோ யாருமே ஸ்டாலினுக்கு இணையான வலிமை கொண்ட தலைவர்கள் இல்லை என்பது எனது கருத்து.
கலைஞர் மீது மிகத் தீவிரமான பற்று கொண்ட தொண்டர்கள் கூட்டம் என ஒன்று இருந்தது. அந்த மாதிரியான தீவிர தொண்டர்கள் என ஸ்டாலினுக்கு யாரும் இல்லை.
ஆனால், அரசியல் வியூகங்கள் வகுப்பதில் கலைஞரை விட ஸ்டாலின் முன்னேறிச் சென்று விட்டார். அந்தளவுக்கு அவர் அரசியல் நுணுக்கங்களைத் தீர்மானிக்கக் கூடியவராக மாறியுள்ளார்.
இன்றைக்கு திமுகவில் உள்ள ஒரே தலைவர் ஸ்டாலின்தான். அங்கே அடுத்தகட்ட தலைவர்கள் என்பதே இல்லை. கலைஞர் காலத்தில் திமுகவில் மூன்று தலைவர்கள் இருந்தார்கள். எம்.ஜி.ஆர். மற்றும் நெடுஞ்செழியன் இருந்தார்கள்.
எம்.ஜி.ஆருக்கு கட்சி செல்வாக்கு மற்றும் மக்கள் செல்வாக்கு இருந்தது. நெடுஞ்செழியனுக்கு மக்கள் செல்வாக்கு பெரியதாக இல்லை. ஆனால், கட்சிக்குள் முக்கிய முகமாக அவர் இருந்தார்.
நிர்வாகம், கட்சியை ஒருங்கிணைப்பது, முதல்வர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் என்பதில் கலைஞர் முதன்மையாக இருந்தார். அப்படி இன்றைக்கு திமுகவில் யாரும் இல்லை. ஒரே முகம் ஸ்டாலின்தான்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்த பெண்கள் ஓட்டுகள் ஸ்டாலின் பக்கம் வந்துள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. அவரது 1000 ரூபாய் திட்டம் பெண்களிடம் மன மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது. அதைக் களத்திலே நாங்கள் உணர்ந்தோம்.
ஆகவே, திமுக இந்த முறை மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றியைப் பெறும். அதைப்போன்று மீண்டும் 3ஆவது முறையாக மோடி பிரதமராவார்.
திமுக அமோக வெற்றியைப் பெறும் போது தனது குடும்பத்தை முன்னிறுத்துவது கலைஞரின் பாணி. அது திமுகவில் பலகாலமாக இருந்து வரும் நடைமுறைதான். அதைப்போன்று இந்தத் தேர்தல் முடிவுகள் வந்தபிறகு உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இது இயற்கையான மாற்றம்தான்" என்று பேசி இருக்கிறார்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications