வேலூர் தேர்தல் தோல்வி.. பாஜக மீது பழிபோட்ட அதிமுக.. கடுமையாக கடிந்து கொண்ட பாஜக.. நடந்தது என்ன?
சென்னை: வேலூர் தேர்தலில் அதிமுக மிகவும் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு மத்திய அரசின் திட்டங்கள்தான் காரணம் என அதிமுக கூறியதை பாஜக ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை யாருடனும் கூட்டணி வைக்காமல் நிறைய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அப்படியே அதிமுகவுடன் மாநில கட்சிகள் கூட்டணி வைத்திருந்தாலும் அதிமுகவுடனான கூட்டணியால்தான் வெற்றி பெற்றன என சொல்லும் அளவுக்கு ஜெயலலிதா மிகப் பெரிய ஆளுமையாக திகழ்ந்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அவரது மறைவுக்கு பின்னர் நிலைமை வேறு. பாஜக, தேமுதிக, பாமக, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் அதிமுக ஒரு மக்களவை தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

வேலூரில் பிடிப்போம்
இது அதிமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரி விட்டதையாவது வேலூரில் பிடிப்போம் என்றால் வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் கடுமையாக போராடி தோல்வி அடைந்தார். அதிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இவர் பெற்ற தோல்வியால் அதிமுக உள்பட திமுகவுக்கே இது அதிர்ச்சியாக இருக்கிறது.

பாஜகவுக்கு அதிமுக மீது கோபம்
வரும் 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வேலூர் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நூலிழையில் தோல்வி அடைந்துள்ளது பாஜகவுக்கு அதிமுக மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குகள்
இதை அண்மையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2014- ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஏசி சண்முகம் 3,24,326 வாக்குகள் பெற்றார். அப்போது உங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட செங்குட்டுவன் 3,83,719 வாக்குகளை பெற்றிருந்தார்.

பாஜக
தற்போது நாம் கூட்டணி அமைத்துள்ளதால் நமக்கு 7 லட்சம் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும் என்று எண்ணினோமே. இப்போது பார்த்தால் திமுக வேட்பாளர் வெற்றிக்கு 8,141 வாக்குகள் வித்தியாசம் இருக்கிறது. 37 தொகுதிகளின் தோல்வியால்தானே நீங்கள் கேட்டு கொண்டபடி வேலூர் தொகுதியில் பாஜகவினர் வாக்கு சேகரிக்கவில்லை.

மோசம்
அவ்வாறிருக்க 8000 வாக்குகளை எடுப்பதற்கு கூட உங்கள் கட்சியினர் உழைக்கவில்லையா என சரமாரியாக கேள்வி எழுப்பிய அமித்ஷா, வரும் சட்டசபை தேர்தலுக்குள் வாக்கு வங்கியை சரி செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என எச்சரித்துள்ளார்.

தமிழிசை கண்டனம்
இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, நம் வேட்பாளர் ஏசி சண்முகம் தோற்றதற்கு வாணியம்பாடி தொகுதிதான் முக்கிய காரணம். அங்குள்ள முஸ்லிம் மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்கு சென்றுள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியனதான் என விளக்கினார். எனினும் இந்த விளக்கத்தை அமித்ஷா ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இந்த காரணத்தையேதான் ஏசி சண்முகமும் முன்வைத்தார். ஆனால் இதற்கு தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications